Advertisment

வாகன ஆவணங்களைச் சரிபார்ப்பது முதல் சீட் பெல்ட்களின் பயன்பாட்டைக் கண்காணிப்பது வரை இனி எல்லாமே ஏடிஎம்எஸ் தான்!

ஏடிஎம்எஸ் எந்த வாகனத்தின் ஆவணங்கள் செல்லாதது தொடர்பான தரவை உள்ளூர் போக்குவரத்து போலீசாருடன் பகிர்ந்து கொள்ளும்.

author-image
WebDesk
New Update
வாகன ஆவணங்களைச் சரிபார்ப்பது முதல் சீட் பெல்ட்களின் பயன்பாட்டைக் கண்காணிப்பது வரை இனி எல்லாமே ஏடிஎம்எஸ் தான்!

Nhai plans to develops Advanced Traffic Management System on highways

வாகன ஆவணங்களைச் சரிபார்த்தல் முதல் சீட் பெல்ட்களின் பயன்பாட்டைக் கண்காணிப்பது வரை, அனைத்து நெடுஞ்சாலைகளிலும் அட்வான்ஸ் டிராபிக் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தை செயல்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisment

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை (ATMS) சோதித்து வருகிறது. இது வாகனத்தின் பதிவு, மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களின் செல்லுபடியாகும் தன்மையைப் பற்றியும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும்.

பயணிகள் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏடிஎம்எஸ் தெரிவிக்கும்.

வாகனத்தின் காப்பீடு, வயது, மாசு சான்றிதழ் மற்றும் CNG கிட் சோதனைச் சான்றிதழின் நம்பர் பிளேட் மூலம் இந்த பொறிமுறையானது தகவல்களைப் பெறும். வணிக வாகனங்கள் தொடர்பான அமைப்பு மூலம் ஃபிட்னஸ் சான்றிதழ்களின் நம்பகத்தன்மையும் சரிபார்க்கப்படும்.

இந்த அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் இது போக்குவரத்து துறையின் வாகன தரவுத்தளத்துடன் இணைக்கப்படும்.

அதன்படி, ஏடிஎம்எஸ்’ எந்த வாகனத்தின் ஆவணங்கள் செல்லாதது என்பது தொடர்பான தரவை உள்ளூர் போக்குவரத்து போலீசாருடன் பகிர்ந்து கொள்ளும்.

அவர்கள் சாலைகளில் தடுப்புகளை வைக்க வேண்டிய அவசியமில்லை, அதற்கு பதிலாக ATMS குறிக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படுவதால், போலீசார் அவர்களுக்கு சலான்களை வழங்குவார்கள்.

தற்போது கட்டப்பட்டு வரும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகளிலும் இந்த முறையை கட்டாயமாக நிறுவ மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, டில்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வே மற்றும் என்சிஆர் பிராந்தியத்தில் உள்ள கிழக்கு பெரிஃபெரல் எக்ஸ்பிரஸ்வே ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment