scorecardresearch

கேரளா, மேற்கு வங்கத்தில் அல்கொய்தா தீவிரவாதிகள் கைது: என்.ஐ.ஏ நடவடிக்கை

பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் அல்கொய்தா பயங்கரவாதிகளால் சமூக ஊடகங்களின் மூலம் இவர்கள் தீவிரவாதி ஆக்கப்பட்டுள்ளனர்.

கேரளா, மேற்கு வங்கத்தில் அல்கொய்தா தீவிரவாதிகள் கைது: என்.ஐ.ஏ நடவடிக்கை
NIA building at lodhi road in new Delhi. Express Photo by Prem Nath Pandey. 10.10.2017.

தேசிய புலனாய்வு அமைப்பான, என்ஐஏ இன்று அதிகாலை இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திடீர் ரெய்டு நடத்தியது. அதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத வேலைநிறுத்தத்தை திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அல்கொய்தா செயற்பாட்டாளர்கள் 9 பேர் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் ஆகிய இடங்களில் இருந்து கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், ஒரு அடிப்படை உடல் கவசம், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.இ.டி மற்றும் பிற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு, அதற்காக இவர்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் தங்கியிருந்து வேவு பார்த்துவந்துள்ளனர்.

இந்த தகவலை உளவுத்துறை மோப்பம் பிடித்து NIAவிடம் கூற தற்போது இந்த அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள NIA, அதில், “மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களில் அல்கொய்தா அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்த இந்த குழு, அப்பாவி மக்களைக் கொல்வது மற்றும் அவர்களின் மனதில் பயங்கரவாதத்தைத் ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு, இந்தியாவில் முக்கியமான இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது. கைது செய்யப்பட்ட இந்தக் குழுவிடம் இருந்து பெரிய அளவிலான டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், ஜிஹாதி இலக்கியம், கூர்மையான ஆயுதங்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள், உடல் கவசம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் அல்கொய்தா பயங்கரவாதிகளால் சமூக ஊடகங்களின் மூலம் இவர்கள் தீவிரவாதி ஆக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் அல்கொய்தா பயங்கரவாதிகளால் சமூக ஊடகங்களின் மூலம் இவர்கள் தீவிரவாதி ஆக்கப்பட்டுள்ளனர். பில் பெற  t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Nia arrests 9 suspected al qaeda operatives in india

Best of Express