Advertisment

ஐம்மு காஷ்மீரில் 2 இடங்களில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானின் ஒரே குழு தான்; என்.ஐ.ஏ விசாரணையில் கண்டுபிடிப்பு

ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மற்றும் தங்கிரியில் தாக்குதல் நடத்தியவர்கள் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள்; பாகிஸ்தானில் இருந்து அவர்களுக்கு உத்தரவு வந்தது; என்.ஐ.ஏ விசாரணையில் கண்டுபிடிப்பு

author-image
WebDesk
New Update
JK army

நவம்பர் 23, 2023 அன்று ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரின் போது பாதுகாப்புப் படைவீரர்கள் பாதுகாப்பில் உள்ளனர். (PTI)

Mahender Singh Manral 

Advertisment

ஜம்மு & காஷ்மீரின் ரஜோரி கிராமத்தில் இந்த ஆண்டு ஜனவரியில் 7 பொதுமக்கள் கொல்லப்பட்டது மற்றும் பூஞ்ச் ​​மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்கள் கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதத் தாக்குதல்களிலும் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா வழிகாட்டுதலின்படி நடக்கும் ஒரே குழுவைச் சேர்ந்த நபர்கள் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) கண்டறிந்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: NIA joins the dots: Poonch, Rajouri attacks by same lot, directions came from Pakistan

ரஜோரியில் உள்ள தங்கிரி கிராமத்தில் ஜனவரி 1 ஆம் தேதி இரவில் முதல் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். மறுநாள் காலை, முந்தைய நாள் இரவு ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த IED வெடித்ததில் மேலும் இருவர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

அடுத்த நாள் காலை தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிடும் போது மூத்த அதிகாரிகளைக் குறிவைக்க இரண்டு தீவிரவாதிகளால் IED புதைக்கப்பட்டு இருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு முதலில் ரஜோரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது, ஆனால் பின்னர் NIA ஆல் எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, ​​தாக்குதல் நடத்திய இருவருக்கு உள்ளூரில் இருந்து தளவாட உதவி வழங்கப்பட்டதை என்.ஐ.ஏ கண்டறிந்தது, தாக்குதல் நடத்திய பிறகு, அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

செப்டம்பரில், பூஞ்ச் ​​மாவட்டத்தைச் சேர்ந்த நிசார் அகமது மற்றும் முஷ்டாக் ஹுசைன் ஆகிய இருவரையும், தங்கிரி பகுதியில் தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் என்.ஐ.ஏ கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு, நிசார், லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த கத்தால் சிந்தி என்ற அபு கத்தால் என்பவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததை NIA அறிந்தது. களத்தில் செயல்படும் தீவிரவாதியான நிசார் என்பவர் முன்பு கைது செய்யப்பட்டார். பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் காவலில் கழித்த பிறகு 2014 இல் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்,” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

தற்செயலாக, நிசார் கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளாக "தகவல் வழங்குபவராக" பணிபுரிந்து வந்தார், மேலும் அவர் தங்கிரியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து உள்ளூர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

"இந்த சம்பவத்திற்குப் பிறகு, இரண்டு தீவிரவாதிகளுக்கும் தங்குமிடம் வழங்குமாறு கத்தால் சிந்தி தன்னிடம் கூறியதாகவும், அவர் முஷ்டாக் ஹுசைனிடம் ரூ. 75,000 கொடுத்ததாகவும், ஒரு குகையில் ஒரு மறைவிடத்தை கட்டும்படி கேட்டுக்கொண்டதாகவும் அவர் புலனாய்வாளர்களிடம் கூறினார். இவர்களுக்கு தனது வீட்டில் சமைத்த உணவை நிசார் வழங்கி வந்தார். ஏப்ரல் மாதம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தீவிரவாதிகள் 22 ரொட்டிகளைக் கேட்டப் பிறகு, அவருக்குத் தெரிவிக்காமல் மறைவிடத்தை விட்டு வெளியேறினர்.

அவர்கள் மறைவிடத்தை விட்டு வெளியேறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, இருவரும் ஒரு இராணுவ வாகனத்தைத் தாக்கினர், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவின் ஐந்து வீரர்களைக் கொன்றனர் மற்றும் பூஞ்சில் உள்ள பீம்பர் கலி-சுரன்கோட் சாலையில் பட்டா துரியன் அருகே மற்றொரு தாக்குதலை நடத்தினர்.

பல ஆதாரங்களைச் சேகரித்த பிறகு, இரண்டு சம்பவங்களிலும் தாக்குதல் நடத்தியவர்கள் ஒன்றுதான் என்பதை NIA இப்போது கண்டறிந்துள்ளது, மேலும் அவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா குழுவை நடத்துபவர்களான சைபுல்லா என்ற சஜித் ஜூட், அபு கத்தால் என்ற கத்தால் சிந்தி மற்றும் முகமது காசிம் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இதை நடத்தியுள்ளனர்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Indian Army Pakistan Jammu Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment