சட்டவிரோத ஊடுருவல் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் புதுச்சேரியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது கொல்கத்தாவை சேர்ந்த பாபு என்பவரை கைது செய்தனர்.
சட்டவிரோத ஊடுருவல் தொடர்பாக சென்னையின் புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், படப்பை, மறைமலைநகர் ஆகிய இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டு 3 பேரை கைது செய்திருக்கின்றனர்.
அதேபோல், புதுச்சேரி 100 அடி சாலை, எல்லைப்பிள்ளைசாவடி பகுதியில் உள்ள ஒரு குடோனில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி, கொல்கத்தாவை சேர்ந்த பாபு என்பவரை கைது செய்திருக்கின்றனர். வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக அழைத்துவந்து, அவர்களுக்கு போலி ஆதார் அட்டை தயாரித்த குற்றச்சாட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“