Advertisment

பெங்களூரு குண்டுவெடிப்பு: சந்தேக நபரை அடையாளம் காண புதிய புகைப்படங்களை வெளியிட்ட என்.ஐ.ஏ

பெங்களூரு ‘ராமேஸ்வரம் கஃபே’ குண்டுவெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபரை அடையாளம் காண என்.ஐ.ஏ புதிய புகைப்படங்களை வெளியிட்டு தகவல் தெரிந்தால் தொடர்பு தகவல் தெரிவியுங்கள் என்று தொடர்பு எண்களை அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
new photos nia bangalore bomb blast

பெங்களூரு ‘ராமேஸ்வரம் கஃபே’ குண்டுவெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபரை அடையாளம் காண மக்களின் ஒத்துழைப்பு தேவை என என்.ஐ.ஏ புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பெங்களூரு  ‘ராமேஸ்வரம் கஃபே’ குண்டுவெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபரை அடையாளம் காண மக்களின் ஒத்துழைப்பு தேவை என்பதால், என்.ஐ.ஏ புதிய புகைப்படங்களை வெளியிட்டு தகவல் தெரிந்தால்  தொடர்பு தகவல் தெரிவியுங்கள் என்று தொடர்பு எண்களை அறிவித்துள்ளது.

Advertisment

பெங்களூரு, குந்தலஹள்ளி பகுதியில்  ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் மாா்ச் 1-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 போ் காயமடைந்தனா். 

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை கா்நாடக காவல் துறையின் மாநகரக் குற்றப்பிரிவு (சி.சி.பி) போலீஸாா் விசாரித்து வரும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமையும் (என்.ஐ.ஏ) வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

பெங்களூரு, ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் வெடிகுண்டு வைத்திருந்த பையை வைத்துவிட்டு, 30 வயது மதிக்கத்தக்க ஒருவா் நடந்து செல்லும் சி.சி.டி.வி வீடியோவை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா்.

அந்த வீடியோவில், மா்ம நபா் ஒருவர் தனது அடையாளத்தை மறைக்கும் வகையில், முகமூடி, தொப்பி அணிந்திருந்தாா். எனினும், கணினி மூலமாக மா்ம நபரின் முகத்தைக் கண்டறிந்துள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள், அவரது புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனா். மேலும், என்.ஐ.ஏ, அவரைப் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபரின் புதிய புகைப்படங்களை தேசிய புலனாய்வு முகமை சனிக்கிழமை (மார்ச் 09) வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ள நபர் குறித்த தகவல் தெரிந்தால் 08029510900 மற்றும் 8904241100 ஆகிய எண்களில் அழைக்கலாம். info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். துப்புக் கொடுப்பவரின் தகவல்கள் குறித்த ரகசியம் காக்கப்படும் என்று தேசியப் புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

இதனிடையே, குண்டுவெடிப்புக்குள்ளான பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகம் 8 நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை (மார்ச்.9) திறக்கப்பட்டது. இதனால், உணவத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment