தேசிய புலனாய்வு அமைப்பு ஹதியா தன் விருப்பத்துடன்தான் திருமணம் செய்துள்ளார் என தெரிவித்துள்ளது
கேரள மாநிலத்தில் ஹதியா (அகிலா) என்னும் ஹிந்து பெண் இஸ்லாமிற்கு மதம் மாறி சாபின் ஜஹான் என்னும் இளைஞரை திருமணம் செய்துக்கொண்டார். கட்டாய மதம் மாற்றம் என ஹதியாவின் பெற்றோர் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இதில் தேசிய புலனாய்வு அமைப்பு ஹதியா எந்த கட்டாயமும் இன்றி தன் முழு விருப்பத்துடன் தான் திருமணம் செய்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.
“அவர் தன் முழு விருப்பத்துடனே மதம் மாறி ஜாஹனை திருமணம் செய்துக்கொண்டதாக கூறினார்” என்கிறார் ஒரு அரசு அதிகாரி.
“ஹதியாவின் தந்தை ஹதியா திருமணத்தின் பொது ஒழுங்கான மனநிலையில் இல்லை என கூறினார். ஆனால் அதற்கேற்ற ஆதாரம் எதையும் அவர் நீதி மன்றத்தில் இன்னும் சமர்பிக்கவில்லை” என்றார் நம்முடன் பேசிய அரசு அதிகாரி.
ஹதியாவின் தந்தை கே எம் அசோகன், தன் மகள் தீவிரவாத கும்பலால் போதிக்கப்பட்டுள்ளார் என குற்றம் சாட்டுகிறார். இருப்பினும் திங்கள் அன்று ஹதியா நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
தேசிய புலனாய்வு அமைப்பு இந்த திருமணத்தில் பணம் ரீதியான எந்த ஒரு இணைப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் மத மாற்று திருமணத்தில் ஈடுபடும் அமைப்பையும் பட்டியல் இட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் இந்த திருமணம் செல்லாது என ஹதியாவின் தந்தைக்கு சார்பாக தீர்ப்பு வந்த பிறகு ஹதியாவின் கணவர் ஜஹான் மேல் முறையிடு செய்தார். அதன் பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைத்தது. மேலும் இந்த அமைப்பு ஜனவரி 2015ல் இருந்து கேரள காவல் துறை 9 கட்டாய திருமண வழக்கை பதிவு செய்துள்ளது என்கின்றனர்.
ஹதியா நீதி மன்றத்தில் ஆஜராகிய பின்னரே இதற்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கும்.