மும்பை குண்டுவெடிப்பு: தஹாவூர் ராணாவை அழைத்துவர அமெரிக்க செல்ல தயாராகும் என்.ஐ.ஏ!

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ராணா (63), பாகிஸ்தான்-அமெரிக்க லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் ராணா தொடர்புடையவர் என்று அறியப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Tahawwur Rana

மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டதற்காக இந்தியாவால் தேடப்படும் தஹாவ்வூர் ராணாவை நாடு கடத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறிதை தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை (NIA) குழு ஒன்று அமெரிக்காவிற்குச் செல்லத் தயாராக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு தெரிய வந்துள்ளது.

Advertisment

Read In English: NIA team ready to go to US for custody of Tahawwur Rana, awaits final nod

இது குறித்து கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, இந்திய அரசாங்கம் அமெரிக்க நிர்வாகத்திற்கு புதிய ஆவணங்களை அனுப்பியுள்ளது, மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருடன் இணைந்து தப்பியோடிய குற்றவாளியை வெளிநாட்டுக்கு சரணடைய வைக்கும் வகையில், 'சரணடைதல் வாரண்ட்' பிறப்பிப்பதை எளிதாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,

இது தொடர்பாக அமைக்கப்பட்ட என்.ஐ.ஏ.குழுவில், ஒரு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அந்தஸ்து உள்ள அதிகாரி தலைமையிலான மூன்று பேர் இடம்பெறுவார்கள். 'சரணடைதல் வாரண்ட்' உறுதி செய்யப்பட்ட உடன்,, மற்ற புலனாய்வு அமைப்புகளைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளுடன் இந்த குழு அமெரிக்கா செல்லும் என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் விமான நிலையத்தில் ராணாவை காவலுக்கு எடுத்தக்கொண்டு உடனடியாக அங்கிருந்து நாடு திரும்புவார்கள்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ராணா (63), தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2008-ம் ஆண்டு நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த சதி வேலைகளில், முக்கிய நபராக இருக்கும்,  பாகிஸ்தான்-அமெரிக்க லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் ராணா தொடர்புடையவர் என்று அறியப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பு வழக்கில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் ராணாவை, நாடு கடத்துவதற்கான உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ராணா தரப்பில் தாக்கல் செய்த மனுவை, கடந்த ஜனவரி 21 அன்று விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்,  மனுவை நிராகரித்தது. இந்த தீர்ப்பிற்குப் பிறகு, ஜனவரி மாத இறுதியில் ஒரு என்.ஐ.ஏ குழு முதலில் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டது, ஆனால் அங்குள்ள அதிகாரிகள் அனைத்து ஆவணங்களையும் மறுபரிசீலனை செய்ய கூடுதல் அவகாசம் கோரினர்.

இந்த விவகாரம் தொடர்பாக, வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், உள்துறை அமைச்சகம் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுடன் சேர்ந்து, அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். ராணாவுக்கு ‘சரணடைதல் வாரண்ட்’ பிறப்பிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது,” என்று உள்துறை அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்திய அரசு ஏற்கனவே பல உறுதிமொழி கடிதங்களை சமர்ப்பித்திருந்தாலும், மேலும் சில உறுதிமொழிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது. "இது தொடர்பான ஒரு உறுதிமொழி கடிதத்தில், ராணா வைக்கப்படும் சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் குறித்த விவரங்கள் இந்திய அரசிடம் கேட்கப்பட்டன. அமெரிக்க அதிகாரிகளின் 4 கேள்விகளுக்கு இந்திய அதிகாரிகள் பதிலளித்தனர். போலீஸ் காவலில் சித்திரவதை செய்யப்படுவதற்கான அச்சம், சட்ட உதவி, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் திகார் சிறையில் வசதிகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணா நாடு கடத்தப்பட்டவுடன், டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ தலைமையகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  அங்கு அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும். "திகார் சிறை நிர்வாகத்திற்கு முறையான தகவல் தொடர்பு இல்லை, ஆனால் அவர்கள் அவரது அறையின் பாதுகாப்பு மதிப்பீட்டையும் தொடங்கியுள்ளனர்; அவர்கள் ராணாவை உயர் பாதுகாப்பு வார்டில் தங்க வைக்க வாய்ப்புள்ளது. அவரது அறையில் உள்ளக குளியலறை வசதியுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் இருக்கும், மேலும் அவர்கள் அவரது செயல்பாடுகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் அறையில் வசதி அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

நேற்று (பிப் 15) அதிகாலை (இந்திய நேரப்படி) வாஷிங்டன் டிசியில் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், “2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் சதித்திட்டக்காரர்களில் ஒருவரும், உலகின் மிகவும் தீய மனிதர்களில் ஒருவராக இருப்பவரை, நாடுகடத்துவதற்கு எனது நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனவே அவர் நீதியை எதிர்கொள்ள இந்தியா திரும்பப் போகிறார்.

நாங்கள் மிகவும் வன்முறையான ஒருவரை உடனடியாக இந்தியாவிடம் திருப்பி அனுப்புகிறோம், மேலும் பின்பற்ற இன்னும் பல உள்ளன, ஏனென்றால் எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் உள்ளன. எனவே நாங்கள் குற்றம் தொடர்பாக இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி இந்தியாவிற்கு நல்லது செய்ய விரும்புகிறோம், அது மிகவும் முக்கியமானது. எனவே அந்த வகையான உறவு எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக நிற்கும். இந்தியாவில் இனப்படுகொலை செய்த ஒருவரை ஒப்படைத்ததற்காக ஜனாதிபதி டிரம்பிற்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறோம். அந்த குற்றவாளி இப்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார், இதற்காக நான் ஜனாதிபதி டிரம்பிற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன், மேலும் இந்தியாவில் நீதிமன்றத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறியிருந்தார்.

கடந்த ஏழு மாதங்களாக ராணாவை காவலில் எடுப்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டு, மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் சட்டத் துறைகளைச் சேர்ந்த இந்திய அதிகாரிகள், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தங்கள் அமெரிக்க சகாக்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ள. 2011 ஆம் ஆண்டில், மும்பை தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்தியதற்காக ராணா உட்பட ஒன்பது பேர் மீது என்.ஐ.ஏ  குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 2014 ஆம் ஆண்டில், என்.ஐ.ஏ  தலைமறைவான குற்றவாளிகளாக பட்டியலிட்ட 9 பேருக்கு எதிராக டெல்லியில் உள்ள ஒரு அமர்வு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத புதிய வாரண்டுகளை பிறப்பித்தது.

அமெரிக்க நீதிமன்றங்களில், இந்தியாவுடனான அமெரிக்க ஒப்படைப்பு ஒப்பந்தம், அதன் இரட்டை ஆபத்து விதி காரணமாக, தன்னை ஒப்படைப்பிலிருந்து பாதுகாத்ததாக ராணா தரப்பில் வாதம் செய்யப்பட்டது. மேலும், தன்மீது குற்றம் சாட்டப்பட்ட குற்றங்களை தான் செய்ததற்கான சாத்தியமான காரணத்தை நிரூபிக்க இந்தியா போதுமான ஆதாரங்களை வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். ஆனாலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க நீதிமன்றம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ் ராணாவை இந்தியாவுக்கு ஒப்படைக்க முடியும் என்று தீர்ப்பளித்தது.

கடந்த ஆண்டு நவம்பரில், ராணா அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் "சான்றிதழ் மனு" ஒன்றை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் கீழ் நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு செயல்முறை. மும்பை தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இல்லினாய்ஸின் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிமன்றத்தில் தான் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக அவர் தனது மனுவில் வாதிட்டார். ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அவரது மறுஆய்வு மனுவை நிராகரித்தது.

ராணா பாகிஸ்தானில் உள்ள ஹசன் அப்தால் கேடட் பள்ளியில் படித்தார், ஹெட்லியும் அதே பள்ளியில் 5 ஆண்டுகள் பயின்றார். பாகிஸ்தான் ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றிய பிறகு, ராணா கனடாவுக்குச் சென்று இறுதியில் கனேடிய குடியுரிமை பெற்றார். பின்னர் அவர் சிகாகோவில் ஃபர்ஸ்ட் வேர்ல்ட் இமிகிரேஷன் சர்வீசஸ் என்ற ஆலோசனை நிறுவனத்தை நிறுவினார். மும்பையில் உள்ள இந்த வணிகத்தின் ஒரு கிளைதான் ஹெட்லிக்கு, லஷ்கர்-இ-தொய்பாவின் சாத்தியமான இலக்குகளை அடையாளம் காணவும் கண்காணிக்கவும் சரியான மறைப்பை வழங்கியது.

அமெரிக்க தாய் மற்றும் பாகிஸ்தானிய தந்தைக்கு பிறந்த அமெரிக்க குடிமகனான ஹெட்லி, மும்பை தாக்குதல்களில் ஈடுபட்டதற்காக 2009 அக்டோபரில் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அதன் பிறகு ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். 2011 ஆம் ஆண்டில், லஷ்கர்-இ-தொய்பாவிற்கு பொருள் உதவி செய்ததற்காகவும், 2005 ஆம் ஆண்டில் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை வெளியிட்ட டேனிஷ் செய்தித்தாள் ஜில்லாண்ட்ஸ்-போஸ்டனைத் தாக்க சதித்திட்டத்தை ஆதரித்ததற்காகவும் ராணா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். இருப்பினும், மும்பையில் நடந்த தாக்குதல்களுக்கு ஆதரவளித்ததற்காக ராணா மீதான மிகவும் கடுமையான குற்றச்சாட்டில் இருந்து அமெரிக்க ஜூரிகள் அவரை விடுவித்தனர்.

International News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: