‘போதைப்பொருள் சப்ளை’ சிங்கம் பட நடிகர் பெங்களூருவில் கைது

விஸ்வரூபம், சிங்கம், அண்ணா பாண்ட், தில்வாலே, ஜம்பூ சவரி , பரமாத்மா போன்ற படங்களில் நடித்துள்ளார்

போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக நைஜீரிய நடிகரை பெங்களூரு காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். பாலிவுட், கன்னடா, தமிழ் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் செக்யூம் மால்வின் Chekwume Malvin.இவர் தமிழில் நடிகர் சூர்யாவின் சிங்கம் 2 படத்திலும், கமலின் விஸ்வரூபம் படத்திலும் நடித்துள்ளார்.

பெங்களூரு கிழக்கு பிரிவு போலீசார் கூற்றுப்படி, மல்வின் மருத்துவ விசாவில் இந்தியாவில் இருந்ததாகவும், மும்பையில் உள்ள நியூயார்க் திரைப்பட அகாடமியில் இரண்டு மாத பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது. போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பெங்களூருவில் எச்.பி.ஆர் லேஅவுட்டில் தங்கியிருந்து மல்வினை கைது செய்தனர். கைதான நபர் கல்லூரி மாணவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும்  போதைப் பொருள்  விநியோகித்து  வந்ததாகக்  கிழக்கு பிரிவு டிசிபி எஸ்டி சரணப்பா கூறியுள்ளார்.

மல்வின் விஸ்வரூபம், சிங்கம், அண்ணா பாண்ட், தில்வாலே, ஜம்பூ சவரி , பரமாத்மா போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் மூன்று நோலிவுட் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அவரிடமிருந்து  15 கிராமுக்கு மேற்பட்ட எம்டிஎம்ஏ, 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 250 மிலி ஹாஷ் ஆயில், செல்போன், ரூ. 2,500 ரொக்க பணம் மற்றும் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்த காவல் துறையினர், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nigerian actor arrested for drug peddling

Next Story
தமிழக கிராமங்களில் அதிக சதவிகித ஓபிசி குடும்பங்கள்: புள்ளிவிவரம் கூறுவது என்ன?Amid caste census calls, data shows nearly half of rural homes OBC households, tamil nadu, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிக்கை, கிராமப் புறங்களில் பாதிக்கு மேல் ஓபிசி குடும்பங்கள், census, tamil nadu, tamil nadu population, india, obc, sc, st
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X