Advertisment

லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 9 வீரர்கள் மரணம்

லடாக்கின் லே மாவட்டத்தில் ராணுவ வாகனம் சாலையில் இருந்து சறுக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் 9 ராணுவ வீரர்கள் மரணம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
army vehicle Ladakh

லடாக்கின் லே மாவட்டத்தில் ராணுவ வாகனம் சாலையில் இருந்து சறுக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் 9 ராணுவ வீரர்கள் மரணம் (பிரதிநிதித்துவ படம்)

லடாக்கின் லே மாவட்டத்தில் சனிக்கிழமையன்று ராணுவ வாகனம் சாலையில் இருந்து சறுக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisment

லடாக் யூனியன் பிரதேசம் கரு ஹரிசன் பகுதியில் இருந்து கெரே பகுதிக்கு ராணுவ வாகனத்தில் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர். கெரே நகருக்கு 7 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பாங்கான பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.

தெற்கு லடாக்கின் நியோமாவில் உள்ள கெரேயில் சனிக்கிழமை மாலை இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Army
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment