கேரளா நிபா வைரஸ் : ஒரே குடும்பத்தில் 4 பேரை பறிகொடுத்த துயரம்

என்.ஐ.வி என்று பிரபலமாக அழைக்கப்படும் நிபா வைரஸ் கேரள மாநிலம் முழுவதும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.

கேரளா மாநிலத்தில் வேகமாகப் பரவி வரும் நிபா வைரஸ் இதுவரை 12 உயிர்களைச் சூறையாடியுள்ளது. நேற்று வரை 10 பேர் பலியான நிலையில், இன்று கூடுதலாக 2 பேர் நிபா வைரசுக்கு பலியாகியுள்ளார்.

கேரளா கோழிகோடு பகுதியைச் சேர்ந்தவர் மூஸா ஹஜ்ஜி. இவரின் இரண்டு மகன்கள் முகமது சலிஹ் மற்றும் முகமது சபித் ஆகியோரை நிபா வைரஸ் தாக்கியுள்ளது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை எடுத்து வந்த பின்பும் எந்தப் பலனுமின்றி இருவரும் இன்று காலை உயிரிழந்தனர். இதுவரை மூஸா குடும்பத்தில் 4 பேர் நிபா வைரசால் பலியாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இது குறித்து விசாரித்தபோது, மூஸா குடும்பத்தார் புதிய நிலம் வாங்கியுள்ளதால், அங்குள்ள கிணற்றை சுத்தம் செய்ய முகமது சலிஹ் மற்றும் முகமது சபித் சென்றுள்ளனர். அந்தக் கிணற்றில் நிறைய வவ்வால்கள் இருந்ததால் வைரஸ் தொற்று ஏற்பட்டு இவர்கள் மரணமடைந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

ஏற்கனவே மூஸா குடும்பத்தில் 2 பேரை நிபா வைரஸ் பரித்துள்ள நிலையில், அவரின் 2 மகன்களையும் தற்போது பறிகொடுத்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close