பிரபல வைரம் வியாபாரி நீரவ் மோடி , பல கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது உலகிற்கே தெரியும். ஆனால் இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு வாடிக்கையாளரையும் ஏமாற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2012ம் ஆண்டு பிரபல தனியார் ஓட்டலில் நீரவ் மோடியை சந்தித்து பேசியுள்ளார் அல்போன்ஸ் என்ற நபர். அதன் பிறகு சில மாதங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் மலிபு என்ற இடத்தில் சந்தித்தி உணவறுதியுள்ளனர். அப்போதி மோடி இவரிடம் உற்சாகமாக பேசியுள்ளார்.
மோடியின் பேச்சுகள் அனைத்தும் ஒரு தமயன் அளிக்கும் அறிவுரைகள் போல் இருந்ததால் அவரை அதிகமாக நம்பியுள்ளார் அல்போன்ஸ். பின்னர் நீண்ட வருடங்களாக இருவருக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லாமல் போனது. இருப்பினும் நீரவ் நல்ல மனிதர் தான் என்றும், மோசடி வழக்கில் சிக்கியவர் என்று ஒரு விவரம் அறியாத அப்பாவியாக இருந்திருக்கிறார் அல்போன்ஸ்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நீரவை தொடர்புகொள்ள முடியாமல் போனது. அந்த காரணத்தினால் நீரவ்க்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளார் அல்போன்ஸ். அந்த மெயிலில், இரண்டு அழகிய வைர மோதிரம் வேண்டும் என்றும், அது ஓவல் வடிவில் இருக்க வேண்டும் என்றும். அது தனது காதலியும் அவரும் நிச்சயத்திற்கான மோதிரமாக இருக்க வேண்டும். எனவே ஸ்பெஷலாக தயார் செய்து தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கேட்டப்படி மோதிரத்தை தயார் செய்து அனுப்புவதாகவும் நீரவ் வாக்கு கொடுத்துள்ளார். சில நாட்களிலேயே அல்போன்ஸ் கேட்டது போல் இரண்டு மோதிரங்களும் வந்துள்ளது. அந்த மோதிரத்தை தனது காதலியிடம் அளித்து “திருமணம் செய்துகொள்ளுமாறு பிரபோஸ்” செய்துள்ளார். அந்த நொடியில் இருந்தே இருவரும் திருமணக் கனவுகளில் மிதக்க தொடங்கியுள்ளனர்.
நீரவ் மோடி பித்தலாட்டம் :
அதே சமயம், ஒரு மோதிரம் 2 லட்சம் டாலர் (இந்திய ரூபாய் படி சுமார் 7 கோடியே 20 லட்சத்துக்கு மேல்) என்பதால் அதனை இன்சுரன்ஸ் செய்ய முடிவெடுத்து நீரவுக்கு மீண்டும் மெயில் அனுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த நீரவ், சான்றிதழ்கள் அனுப்பிவிட்டதாகவும் சில நாட்களில் வந்து சேர்ந்துவிடும் என்றும் கூறி வந்துள்ளார்.
ஆனால் நாட்கள் கடந்து செல்ல சான்றிதழ்கள் வந்து சேரவில்லை. எனவே அல்போன்ஸ் காதலி எதர்ச்சியாக அருகில் உள்ள இன்சுரஸ் நிறுவனத்திற்கு அந்த மோதிரங்களை கொண்டு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற சோதனையில் மோதிரங்களில் இருப்பது வெறும் ஜொலிக்கும் கல் மட்டுமே வைரம் கிடையாது என்று தெரியவந்துள்ளது.
இந்த உண்மையை அல்போன்ஸிடம் காதலி கூற, இதனை நம்ப முடியாமல் தத்தளித்தார் அல்போன்ஸ். மேலும், தான் 2 லட்சம் டாலர்கள் அந்த மோதிரத்திற்கு செலவழித்ததாகவும், அது எப்படி போலியாக இருக்கும் என்றும் பல கேள்விகள் அவருக்குள் எழுந்தது.
ஆனால் இந்த நிகழ்வுக்கு பிறகு தான் அல்போன்சுக்கு நீரவ் செய்திருக்கும் மோசடிகள் அனைத்தும் தெரிய வருகிறது. ஒரு நிமிடம் கலங்கி போய் நின்ற அவர் தனது காதலிக்கு ஏமாந்ததை புரிய வைக்க முயற்சித்தார். இருப்பினும், “2 லட்சம் ரூபாயை ஒன்றுமே தெரியாமல் கொடுத்து நீ ஏமாந்துவிட்டாய் என கூறுகிறாயா?” என்று கூறினார் காதலி. அல்போன்ஸ் கூறுவதை நம்ப மறுத்து, தனது காதலன் தம்மை ஏமாற்றிவிட்டதாக எண்ணி அவரை விட்டு பிறிந்து செல்கிறார்.
இதை ஆங்கிலத்தில் படிக்க
இதனால் மனமுடைந்த அல்போன்ஸ், நீரவுக்கு மீண்டும் ஒரு மெயில் எழுதுகிறார். அதில், “நீ என் வாழ்க்கையில் என்ன செய்திருக்கிறாய் என்று தெரிகிறதா? உன்னால் நான் என் வருங்கால மனைவியை இழந்துவிட்டேன். என் வாழ்க்கையையே சீறழித்துவிட்டாய்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அதன் பின் எவ்வித பதிலும் நீரவிடம் இருந்து வரவில்லை.
விரக்தியில், அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா உச்சநீதிமன்றத்தில் நீரவுக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறார் அல்போன்ஸ். அந்த வழக்கு புகார் மனுவில், தனது வாழ்க்கையையே கெடுத்ததற்காகவும், தன் வாழ்வில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் சீர்குலைத்த காரணத்திற்காகவும், 2 லட்சம் டாலர் உட்பட 4.2 மில்லியன் டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது. இது குறித்து அல்போன்ஸிடம் பிரபல தனியார் செய்தி நிறுவனம் கேள்வி கேட்கையில், “ இந்த பணம் நிச்சயம் எனக்கு கிடைக்காது என்று தெரியும். ஏனெனில் எனக்கு முன்னால் நீரவிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்காமல் எனக்கு வராது. இருப்பினும் நான் இந்த வழக்கு போட்டதற்கு காரணம், என்னை போல் யாரும் அவரை நம்பி ஏமாறக் கூடாது. நான் என் வாழ்க்கையை தொலைத்தது போல யாரும் தொலைத்துவிட கூடாது” என்றார்.