பஞ்சாப் நேஷனல் வங்கியை திவாலாக்கிய நீரவ் மோடி, லண்டனில் சொகுசு குடியிருப்பில் வசித்து, டைமண்ட் பிஸினெஸ் செய்வதாக டெலிகிராஃப் நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது.
லண்டனில் இருந்து வெளிவரும் அந்த நாளேடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அதில் சுமார் 9 லட்சம் மதிப்புள்ள கோட் அணிந்திருக்கும் அவர், நிருபர் கேட்கும் கேள்விகள் அனைத்துக்கும், ‘நோ கமெண்ட்ஸ்’ என பதிலளிக்கிறார்.
ஆடம்பர குடியிருப்பு ஒன்றில் 3 பெட்ரூம் கொண்ட வீட்டில் மோடி வசிப்பதாக டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது.
வேலை மற்றும் ஓய்வூதியத்துறை அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தேசிய காப்பீட்டு எண் மூலம், வங்கிக் கணக்குகளை ஆன்லைனில் ஹேண்டில் செய்வதாகவும் டெலிகிராஃப் குறிப்பிட்டுள்ளது.
மோடி மற்றும் அவரது தாய் மாமன் மெஹுல் சோக்ஸி, தங்களிடம் 13600 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டதாக பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொடுத்த புகாரை அடுத்து, இருவரும் புலனாய்வு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.