நிர்பயா வழக்கு : 22ம் தேதி நால்வருக்கும் மரண தண்டனை!

நான்கு நபர்களுக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை 2017ம் ஆண்டு உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

By: Updated: January 7, 2020, 05:54:58 PM

Nirbhaya gangrape case 2012 review petition rejected :  டெல்லியில் ஓடும் பேருந்தில் பாராமெடிக்கல் மருத்துவம் படித்த மாணவி ஒருவர் 2012ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் சிங்கப்பூருக்கு மேற்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்புக்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

2013ம் ஆண்டு விரைவு நீதிமன்றங்கள் மூலமாக கூட்டுப்பாலியல் வன்கொடுமை, இயற்கைக்கு புறம்பான பாலியல் வன்கொடுமை, கொலை, மற்றும் கொலை முயற்சி என இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டது. இதில் ஒருவர் மைனர் என்ற காரணத்தால் வெளியில் விடப்பட்டார்.

மீதம் இருந்த ஐந்து நபர்களில் ஒருவர் ஜெயிலிலேயே தற்கொலை செய்து கொண்டார். மீதம் இருந்த நான்கு நபர்களுக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை 2017ம் ஆண்டு உறுதி செய்தது. இதனை எதிர்த்து மூன்று குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுக்கள் ஜூலை மாதம் 9ம் தேதி 2018ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

நான்காவது குற்றவாளியான அக்‌ஷய் குமார் சிங்கின் மறுசீராய்வு மனு கடந்த டிசம்பர் 18ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பிறகு இன்று ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது வெளியான தீர்ப்பில் மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டு தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் திகார் ஜெயிலில் ஜனவரி 22ம் தேதி காலை ஏழு மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என்று தூக்கு தண்டனைக்கான நேரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை நெருங்கும் தூக்கு மேடை – மரண தண்டனை குறித்த கேள்விகளும், பதில்களும்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Nirbhaya gangrape case 2012 review petition rejected and death warranted issued

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X