பட்ஜெட்டைத் தயாரித்த அதிகாரிகளில் எஸ்.சி, எஸ்.டி சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது மக்களவையில் செவ்வாய்கிழமை கடுமையாகத் தாக்கிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் ஏன் எஸ்.சி சமூகத்தை சேர்ந்தவரக்ள் இல்லை என்று கேட்டுள்ளார். ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் ஐந்து அறங்காவலர்களில் ஒருவர் கூட ஏன் எஸ்.சி சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னதாக, முன்னாள் மத்திய அமைச்சரான அனுராக் தாக்கூர், காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான கோரிக்கைக்காக அவரை தாக்கி பேசினார்.
இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது மற்றும் அகிலேஷ் யாதவ் சபையில் ஒரு நபரின் ஜாதி பற்றி எப்படி? கேட்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
சபையில் யாருடைய சாதியைப்பற்றியும் யாரும் கேட்கக் கூடாது என்றும், அந்தக் கருத்தை நீக்குவதாகவும் ஜகதாம்பிகா பால் கூறினார். ஆனால் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை, நாடாளுமன்ற பதிவேடுகளில் இருந்து கருத்து அகற்றப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
எக்ஸ் தளத்தில் தாக்கூரின் உரைக்கான யூடியூப் இணைப்பைப் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “என்னுடைய இளம் மற்றும் ஆற்றல் மிக்க சக கட்சி பிரதிநிதியான் அஅனுராக் தாக்கூரின் இந்த உரையை அவசியம் கேட்க வேண்டும். உண்மைகள் மற்றும் நகைச்சுவையின் சரியான கலவை, இந்திய கூட்டணியின் மோசமான அரசியலை அம்பலப்படுத்துகிறது” என்று தெரிவித்திருந்தார்.
சபையில், ராகுல் காந்தி பேசுகையில், “அனுராக் தாக்கூர்ஜி என்னை அவமானப்படுத்தினார், ஆனால் நான் அவரிடம் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை. நான் ஒரு போரை நடத்துகிறேன். நீங்கள் விரும்பும் அளவுக்கு என்னை அவமானப்படுத்துங்கள், ஆனால் இங்கே (இந்த சபையில்) ஜாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் உறுதி செய்வோம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று கூறினார்.
பட்ஜெட் அல்வா விழாவில் எதிர்க்கட்சித் தலைவரின் சாதாரண உரையாடலைக் கேட்டு வேதனை அடைந்ததாக சீதாராமன் கூறினார். சேவைகளில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான ஜவஹர்லால் நேருவின் அறிக்கை, காக்கா காலேல்கரின் கீழ் முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்பு கமிஷன் கிடப்பில் போடப்பட்டது, இந்திரா காந்தியின் பின்னணியில் மண்டல் கமிஷன் அறிக்கையை வைத்தது மற்றும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக ராஜீவ் காந்தி ஒரு பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டி ஆகியவற்றை அவர் மேற்கோள் காட்டினார்.
“ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் எத்தனை எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி-க்கள் உள்ளனர்? ஒரு எஸ்.சி கூட இல்லை. தொண்டு வீட்டிலிருந்து தொடங்குகிறது. ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் உள்ள ஐந்து அறங்காவலர்களில், எஸ்.சி இல்லை, ”என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் "நாம் அனைவரும் எஸ்.சி மற்றும் எஸ்.டி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முயற்சி செய்யலாம், ஆனால் தலைமுறை தலைமுறையாக அறிக்கைகள் ஒரே மாதிரியாக வெளியிடப்படுகிறது. ஆனால் உறுதியான வேலை எதுவும் செய்யப்படவில்லை என்றால், உங்கள் வாக்குறுதியை எப்படி நம்புவார்கள்?" என்று அவர் கேட்டார்.
“அதிகாரிகள் அறைக்குள் பல நாட்கள் பட்ஜெட்டை தயாரிக்க செலவு செய்தார்கள். ஆனால் நீங்கள் எத்தனை எஸ்.சி-க்கள் இருக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? மேலும் நான் தலையில் கை வைத்து சிரிக்கும்போது, எஸ்.சி என்று சொன்னதால் சிரித்தேன் என்று ட்ரோல் செய்கிறீர்கள். ஆனால் மிக சாதரணமாக நான் என் தலையை எப்போதும் போல் அசைத்தேன்” என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை அதிகாரிகள் பல நாட்கள் அறையை விட்டு வெளியே வர முடியாததால், எந்த முக்கியமான சந்தர்ப்பத்திலும் ஹல்வா சாப்பிடுவது பட்ஜெட் தயாரிப்பதில் பழைய பாரம்பரியம் என்று சீதாராமன் கூறினார்.
"அவர்கள் நார்த் பிளாக்கின் அறையில் ஐந்து இரவுகள் மற்றும் நான்கு பகல்கள் தங்குகிறார்கள், ஏனெனில் பட்ஜெட்டின் ரகசியத்தன்மையை மதிக்க வேண்டும் இது 2013-14ம் ஆண்டு ஒரு புகைப்பட நிகழ்வாக மாறியது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு எல்லா அதிகாரமும் இருந்தது அப்போதைய நிதியமைச்சரிடம், பட்ஜெட் தயாரிக்கும் அறைக்குள் சென்று புகைப்படம் எடுத்தவர் யார்? அதிகாரிகளில் எத்தனை எஸ்.சி-க்கள் என்று கேட்டாரா? அவர் ஏன் ஹல்வா தயாரிக்கும் நிகழ்வை ரத்து செய்யவில்லை? நாட்டு மக்களை பிளவுபடுத்தும் சதியின் ஒரு பகுதியாக இந்த கேள்வி கேட்கப்படுகிறது. இது ஒரு அவமானம், ”என்று அவர் பேசினார்.
அவரது கூற்றுப்படி, பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டவர்களில் இருவர் அறையில் இருந்தபோது குடும்ப உறுப்பினர்களின் மரணம் குறித்து அறிந்தனர் - ஆனால் பட்ஜெட் உரை வரை வெளிவரவில்லை, ஏனெனில் பட்ஜெட் உருவாக்கும் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, அபிமன்யு கொல்லப்பட்டது போன்ற ஒரு சக்கரவியூகத்தில் மக்களை சிக்க வைக்கும் பா.ஜ.கவின் போக்கின் விரிவாக்கம்தான் பட்ஜெட் என்று ராகுல் காந்தியின் கூற்றின் மீது தாக்கூர் தனது விமர்சனத்தை முன்வைத்தார். "சிலர் தற்செயலான இந்துக்கள் மற்றும் மகாபாரதம் பற்றிய அவர்களின் அறிவும் தற்செயலானது" என்று அவர் விமர்சித்தார்.
மகாபாரதத்தைப் புரிந்துகொள்வதற்கு காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் தி கிரேட் இந்தியன் நாவலை சிலர் படிக்க வேண்டும் என்று அவர் கூறினார் - இது ஆசிரியருக்கு ஒரு காரணம் நோட்டீஸ் அனுப்ப வழிவகுக்கும் என்று கூறினார். “அரசியலமைப்பைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் அரசியல் சாசனத்தின் நகலை அசைக்கும் எதிர்க்கட்சியினருக்கு அதில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை தெரியுமா என்று மக்களவையின் தொடக்கத்திலேயே நான் கேட்டேன், ஆனால் அவர்களிடம் பதில் இல்லை. இவர்கள் அரசியலமைப்பையோ, மகாபாரதத்தையோ படிக்கவில்லை, ஆனால் அவர்கள் மகாபாரதத்தை தொலைக்காட்சியில் பார்க்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையெனில் அபிமன்யுவின் கொலையில் 6 அல்ல 7 மகாராத்திகள் ஈடுபட்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.