FM Nirmala Sitharaman Interview: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியியில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அறிவித்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். இதையடுத்து இன்று (மார்ச் 26) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் மற்றும் கொரோன தடுப்பு காலத்தில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் பாதுகாப்புக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூய்மைப்பணியாளர்கள், மருத்துவமனை வார்டு பாய்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், மருத்துவர்கள், சிறப்பு நிபுணர்கள் மற்றும் இதற சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படும்.
இந்த சிறப்பு காப்பீட்டு திட்டத்தின் கீழ், கோரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்கப்படும்.
அனைத்து அரசு சுகாதார நிலையங்கள், மருத்துவ மையங்கள், மருத்துவமனைகள், அதே போல, மாநில அரசின் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் அனைத்தும் இந்த சிறப்பு காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும்.
இந்த சிறப்பு காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து போராட சுமார் 22 லட்சம் சுகாதார ஊழியர்களுக்கு காப்பீடும் வாங்கப்படும்.
பிரதமரின் கரிப் கல்யான் திட்டம்
ஏப்ரல் மாதம் முதல் ஒவ்வொரு விவசாயிக்கும் மாதம் ரூ.2000 வழங்கப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் 8.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி வழங்கப்படும்.
ஏழைகளுக்கு உதவ பிரதமரின் கரிப் கல்யான் திட்டம் மூலம் பணம் செலுத்தப்படும்
கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும்.
நாடு தழுவிய ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்.
பதிவு செய்த 3.5 கோடி கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க அவர்களின் நல நிதியை (ரூ .31,000 கோடி) பயன்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது .
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்த்தப்படும்.
உஜ்வலா திட்டத்தில் கேஸ் சிலிண்டர் பெற்ற சுமார் 8 கோடி குடும்பத்திற்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடமானம் எதுவும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
முதலாளி மற்றும் பணியாளர் ஆகிய இரு நிறுவனங்களின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்) பங்களிப்பை இந்திய அரசு செலுத்தும், இது 24 சதவீதமாக இருக்கும், இது அடுத்த 3 மாதங்களுக்கு இருக்கும்.
100 பேருக்கு குறைவான ஊழியர்களை கொண்ட நிறுவனம், ஊழியர்கள் 3 மாதத்துக்கு பி.எப். கட்ட
தேவையில்லை, அதனை மத்திய அரசே செலுத்தும். இது மாத ஊதியம் ரூ.15,000 கீழ் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே சலுகை பொருந்தும்.
வருங்கால வைப்பு நிதியில் 75% திரும்பியளிக்கத்தேவையில்லாத தொகையை பெற்றுக்கொள்ளும் வசதியின் மூலம் 4.8 கோடி ஊழியர்கள் பலனடைவார்கள்.
முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 2 தவணைகளாக 3 மாதங்களுக்கு
வழங்கப்படும்.
80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை 3 மாத்துக்கு கூடுதலாக வழங்கப்படும். இதனுடன், ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்.