Nirmala Sitharaman Mega bank mergers : இந்திய நாட்டின் முதுகெலும்பாய் இருப்பது பொதுத் துறை வங்கிகள். ஆனால், சமிப காலங்களில் இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் தங்கள் கொடுத்த கடன்கள் எல்லாம் வாராக்கடனாய் மாறின. உதாரணமாக, நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு 2018-ன் இறுதி காலாண்டில் 2,416 கோடி ரூபாய் வாராக்கடனால் நஷ்டம் ஏற்பட்டது.
முதலீட்டார்கள் வங்கியில் வாங்கிய கடன்களுக்கு வட்டிக் கட்ட முடியாமல் தள்ளாடின. வங்கியும் முதலீட்டாளர்களுக்கு கடன் கொடுப்பதை கொஞ்ச கொஞ்சமாய் தவிர்த்து வந்தன. வங்கிகளுக்கும், முதலீட்டாளர்களுக்கு இடையிலான நம்பிக்கை தேய்மானம் அடைந்தது .
இந்த சூழ் நிலையை கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்களைகளை எடுத்து வந்திருந்தது. அதன் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அதிரடி முடிவுகளை அறிவித்தார்.
அந்த அறிவுப்புகளில் முக்கிய சாரம்சங்களாக இருப்பது இந்தியாவில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை 12 வங்கிகளாக குறைத்திருப்பதே.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/fina-300x188.jpg)
முதலாவதாக, பஞ்சாப் தேசிய வங்கி , யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா , ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் போன்ற வங்கிகளை ஒன்றினைத்து 18 லட்சம் கோடி மதிப்பில் இந்தியாவின் இரண்டாவது வங்கியாக மாற்றப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரம் சிறந்திருக்கிறது - இலக்கு எட்டக் கூடிய ஒன்றே
(பஞ்சாப் தேசிய வங்கி இனி முதன்மை வங்கியாக இருக்கும்)
இரண்டாவதாக, கனரா மற்றும் சின்டிகேட் வங்கிகள் ஒன்றாக இணைக்கப்படுள்ளது. இணைக்கப்பட்ட வங்கி 15 லட்சம் கோடி மதிப்பில் இந்தியாவின் ஐந்தாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும்.
(கனரா வங்கி இனி முதன்மை வங்கியாக இருக்கும்)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/canara-300x169.jpg)
மூன்றாவதாக, யூனியன், ஆந்திரா மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகளை ஒன்றிணைத்து 14.61 லட்சம் கோடி மதிப்பில் இந்தியாவின் ஐந்தாவது மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாக மாற்றப்பட்டுள்ளது.
(யூனியன் இனி முதன்மை வங்கியாக இருக்கும்)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/corporation-300x169.jpg)
நான்காவதாக, அலகாபாத் மற்றும் இந்தியன் வங்கிகளை ஒன்றிணைத்து 8.08 லட்சம் கோடி மதிப்பில் இந்தியாவின் ஏழாவது மிகப்பெரிய பொதுத் துறை வங்கியாக மாற்றபட்டுள்ளது.
(இந்தியன் வங்கி இனி முதன்மை வங்கியாக இருக்கும் )
/tamil-ie/media/media_files/uploads/2019/08/allhabad-bank-300x169.jpg)
ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமும் - பொதுத் துறை வங்கிகளின் சீர்திருத்தங்களும்
/tamil-ie/media/media_files/uploads/2019/08/reposition-300x167.png)