பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், சிறு விவசாயிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு ஏற்படும் இன்னலைத் தணிக்க உதவும் வகைகில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதாரப் திட்டங்களை வியாழக்கிழமை வெளியிட்டார்.
மேலும், மத்திய, மாநில அர்சுகளின் பொது விநியோக திட்டத்தின் ரேஷன் அட்டைகள் இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகளுக்கான அறிவிப்புகள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவல நிலையை அரசு அறிந்திருப்பதாகக் கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அல்லது மாநில அரசுகளின் பொது விநியோக ரேஷன் அட்டைகள் இல்லாத 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குவதற்காக 3,500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் அமல்படுத்துவதன் மூலம், 23 மாநிலங்களில் 67 கோடி மக்களுக்கு பொது விநியோக திட்ட மக்கள் தொகையில், 83 சதவீதம் பேருக்கு பயனளிக்கும் என்று கூறினார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவல நிலையை அரசாங்கம் அறிந்திருப்பதாகக் கூறிய நிர்மலா சீதாராமன், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடம் அமைப்பதற்கும் அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்குவதற்கும் எஸ்.டி.ஆர்.எஃப்-ஐ பயன்படுத்த மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், “நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம். நாங்கள் புலம்பெயர்ந்தோருக்குச் பல்வேறு வழிகளில் சென்று சலுகைகளை கொடுக்கிறோம்” என்று நிர்மலா சீதாராமன் கூறினார். கடந்த இரண்டு மாதங்களில் நகர்ப்புற ஏழைகளுக்காக 7,200 புதிய சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
விவசாயிகளுக்கான அறிவிப்பு
மார்ச்-ஏப்ரல் முதல் கிராமப்புற பொருளாதாரம் மற்றும் விவசாயிகள் மத்தியில் பணப்புழக்கத்தை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வட்டி குறைப்பு மற்றும் பயிர் கடன்களுக்கான திருப்பிச் செலுத்தும் ஊக்கத்தொகை மார்ச் 1 முதல் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
“இன்றைய அறிவிப்புகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், சிறு வணிகர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறு விவசாயிகள் மீது கவனம் செலுத்துகின்றன. 3 கோடி குறு விவசாயிகள் ஏற்கெனவே சலுகை விகிதத்தில் ரூ .4 லட்சம் கோடி கடன்களைப் பெற்றுள்ளனர் ”என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்துகான அறிவிப்பு
கிராமப்புற இந்தியாவில் பெரிய அளவிலான தேவையையும் அழுத்தத்தையும் சமிக்ஞை செய்யும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 1,87 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் 2.33 கோடி கூலி வேலை செய்பவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10,000 கோடி வெறும் 43 நாட்களில் செலவிடப்பட்டது. மே 13 வரை நாங்கள் ஏற்கனவே 14.62 கோடி நபர்களுக்கு தினமும் வேலைகளை உருவாக்கியுள்ளோம். இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 40-50% அதிகமான நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்குச் சென்ற பிறகு தீவிரமாக சேர்க்கப்படுகிறார்கள்” என்று நிதியமைச்சர் கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கியமானது, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ) கடன் உத்தரவாதமாக நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையாற்றினார். அப்போது, பொருளாதாரத்தில் கோவிட் -19 இன் தாக்கத்தை தீர்ப்பதற்கும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 10 சதவீதம் ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைத் தவிர, முதல் அறிவிப்பில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி) முதல் ரியல் எஸ்டேட் மற்றும் மின் விநியோகம் மற்றும் சம்பளம் பெறும் ஊழியர்கள் வரையிலான துறைகளுக்கு 16 அறிவிப்புகள் இருந்தன. நாவல் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த வாரக்கணக்கில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் பணப்புழக்க உட்செலுத்துதல் என்பது இந்த அறிவிப்புகளின் மிகப் பெரிய கருப்பொருளாகும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்த கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் மற்றும் மார்ச் மாதத்தில் ரூ.1.7 லட்சம் கோடி நிதி தொகுப்பு தவிர, இந்திய ரிசர்வ் வங்கி மொத்தம் ரூ.8.1 லட்சம் கோடி பண ஊக்க நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.