/tamil-ie/media/media_files/uploads/2019/12/images-horz-1.jpg)
Nirmala Sitharaman blocked Kushbhu Sundar in Twitter
Nirmala Sitharaman blocked Kushbhu Sundar in Twitter : தமிழக காங்கிரஸில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒருவராக இருக்கிறார் நடிகை குஷ்பு. சமீபத்தில் சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுத்துவிட்டு மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்துள்ளார். மோடி அரசில் உள்ள குறைபாடுகள் குறித்து தொடர்ந்து பேசி வருபவர்களில் மிகவும் முக்கியமானவராக இவர் கருதப்படுகிறார்.
இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து குஷ்புவை ப்ளாக் செய்துவிட்டதாக அறிவித்துள்ளார் குஷ்பு. இது தொடர்பாக அவர் பதிவிட்டிருக்கும் ட்விட்டர் கருத்தில் ”நிர்மலா சீதாராமன் என்னை ப்ளாக் செய்துவிட்டார். அவர் உண்மையை கேட்க விரும்பவில்லை. அவர் நரேந்திர மோடி, அமித் ஷா போன்று பொய்யை மட்டும் சுவாசித்து, உண்டு, வாழும் நபர்களுடன் வாழ்வதால் அவரை குற்றம் சுமத்த ஒன்றும் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
#NirmalaSitharamanji has blocked me.. she does not like to hear the truth..poor her, she is use to people like @narendramodi n @AmitShah who breathe, eat n live on lies.. cannot blame her.
— KhushbuSundar ❤️ (@khushsundar) December 25, 2019
ஏற்கனவே பொருளாதார மந்த நிலை குறித்து காங்கிரஸ் கட்சியினர் அடிக்கடி விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் மாதமே குஷ்புவை நிர்மலா சீதாராமன் ப்ளாக் செய்துள்ளார். தற்போது அதனை மீண்டும் நினைவுபடுத்தும்படியாக குஷ்பு சுந்தர் ட்வீட் செய்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.