Nirmala Sitharaman Interview Tamil: கடந்த ஆறு மாதங்களாக கோவிட் -19 பேண்டமிக் சூழ்நிலை, கடுமையான தேசிய லாக் டவுனைத் தொடர்ந்து ஏப்ரல்-ஜூன் மாதங்களில் ஏற்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 23.9 சதவிகிதம் சரிவு போன்றவை இருந்தபோதிலும் பேண்டமிக் முடியும் காலகட்டம் குறிப்பாக அதற்கான தடுப்பூசி இல்லாத நிலை உள்ளிட்ட மாறுபட்ட சவால்களைப் பொருளாதாரம் எதிர்கொள்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை தெரிவித்தார்.
"இந்த ஆறு மாதங்கள் உண்மையில் எந்த சவாலையும் குறைக்கவில்லை ஆனால், சவால்களின் தன்மை மாறிவிட்டது. மேலும் இப்போது அமைச்சகம், முன்பு இருந்ததைவிட விரைவாகப் பதிலளிக்க உள்ளது" என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு (விரிவான பேட்டி நாளை வெளியிடப்படும்) நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், அதிகப்படியான விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை போன்ற பல்வேறு காரணங்களினால் மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் குறைவாக இந்தியாவில் இருந்தாலும், - கோவிட் -19 சூழ்நிலை மிகவும் கவலை அளிக்கிறது என்று கூறினார். சமூக இடைவெளி முதல் மாஸ்க் பயன்பாடு மற்றும் அடிக்கடி கை கழுவுதல் வரை தொற்றுநோயைக் கையாள்வதில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நீங்கள் இதைச் செய்கிறீர்கள் என்றும் குறிப்பிட்டார்.
தொழிலாளர் தீவிர தொழில்களான ஆடை உற்பத்தி, உள்நாட்டுத் தேவையை விட வெளிநாட்டுத் தேவை அதிகரிக்கும் வேகத்துடன் ஸ்டீல் போன்ற ஏற்றுமதி துறைகளும் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பணிக்குத் திரும்புகின்றனர் என்று இந்தியா இன்க் பத்திரிகைக்குத் நிர்மலா தெரிவித்துள்ளார். "இது அமைச்சகத்தின் கண்டுபிடிப்புகளுடன் பொருந்துகிறது. விவசாயம் மட்டுமல்ல, விவசாயம் அல்லாத பிற கிராமப்புற நடவடிக்கைகளும் வலுவானவை" என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று மாதங்களில், இழந்தவற்றின் பெரும் பகுதிகளைப் பொருளாதாரம் மீட்டெடுத்துள்ளது என்பதை Broad high-frequency indicators வெளிப்படுத்துகின்றன. இது ஜிஎஸ்டி வருவாயில் பிரதிபலிக்கிறது அதாவது, 2019 ஆகஸ்ட் மாதத்தைவிட இந்த ஆண்டு ஆகஸ்டில் 88 சதவீதமாக இருக்கிறது. ஆகஸ்டில் உருவாக்கப்பட்ட மின் வழி பில்கள் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியின் மதிப்பில் 97.2 சதவீதமாக இருந்தன; முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 50-க்கும் மேற்பட்ட PMI விரிவாக்கத்தைக் குறிக்கிறது.
இடர் தவிர்ப்பு (risk-aversion) குறித்து அரசாங்கத்தில் இரு பிரிவினருக்குள் அமைதியின்மை நிலவுகிறதா என்றதற்கு , “இல்லை. அத்தகைய தயக்கம் ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.. நிச்சயமாக, நான் நேரம் கொடுப்பேன்” என்றார் நிதியமைச்சர் சீதாராமன்.
பயனாளிகளை வரையறுப்பதில் உள்ள சவால், கட்டுப்பாட்டுக்கு ஒரு காரணமா என்று கேட்டதற்கு, மக்களின் கணக்குகளைப் பணம் சென்று அடைவது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று டிபிடி-க்கு (Direct Benefit Transfer) நிதியமைச்சர் கூறினார். மேலும், ஆத்மநிர்பார் பேக்கேஜ் (AtmaNirbhar package) ஒன்றுக்கு மட்டுமல்ல, பல துறைகளுக்குப் பலவிதமான விஷயங்களை உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார். “நாங்கள் அறிவித்ததைப் போல, 24 மணி நேரத்திற்குள் அது தீர்ந்துவிட்டது என்பதல்ல. உண்மையில், அது இப்போது கூட இருக்கிறது" என்றார்.
முன்னணி துறைகளான சுற்றுலா, ஹாஸ்ப்பிட்டாலிட்டி, ஹோட்டல் மற்றும் உணவகங்கள் கோவிட் -19-ஆல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் கூறினார். சுற்றுலாப் பயணம் வெளிநாட்டினரிடையே எந்த அதிர்வுகளையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், சுற்றுலா சீசன் சில வாரங்களில் தொடங்குகிறது. உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக மெட்ரோ நகரங்களில், நீண்ட கால லாக் டவுனுக்குப் பின்னர் வார இறுதி பயணங்களை நாடுகிறார்கள். "ஹோட்டல் மற்றும் உணவகங்களில், உணவு வாங்கிச் செல்வதும் அதிகரித்து வருகிறது" என்று அவர் கூறினார்.
இரண்டு மாதங்களில் பட்ஜெட் பட்டியல் தொடங்கவுள்ள நிலையில், தனது மேஜையில் மிகவும் அழுத்தமான விஷயம் என்ன என்று கேட்டதற்கு, 2019 டிசம்பரில் அடையாளம் காணப்பட்ட ரூ .111 லட்சம் கோடி முதலீட்டைக் கொண்ட 6,000-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களின் தொகுப்பை அவர் குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.