இறுதி தேதி இல்லை, தடுப்பூசி இல்லை… செலவிட தயக்கமில்லை : நிர்மலா சீதாராமன்

சரியான தடுப்பூசி இல்லை, பேண்டமிக் முடிவதற்கான தெளிவான தேதி இல்லை, குணப்படுத்தப்பட்ட மக்கள் மீண்டும் பாதிக்கப்படுகிறார்கள் என சில இடங்களில் அறிக்கைகள் வந்துள்ளன…

By: September 28, 2020, 5:37:35 PM

Nirmala Sitharaman Interview Tamil: கடந்த ஆறு மாதங்களாக கோவிட் -19 பேண்டமிக் சூழ்நிலை, கடுமையான தேசிய லாக் டவுனைத் தொடர்ந்து ஏப்ரல்-ஜூன் மாதங்களில் ஏற்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 23.9 சதவிகிதம் சரிவு போன்றவை இருந்தபோதிலும் பேண்டமிக் முடியும் காலகட்டம் குறிப்பாக அதற்கான தடுப்பூசி இல்லாத நிலை உள்ளிட்ட மாறுபட்ட சவால்களைப் பொருளாதாரம் எதிர்கொள்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை தெரிவித்தார்.

“இந்த ஆறு மாதங்கள் உண்மையில் எந்த சவாலையும் குறைக்கவில்லை ஆனால், சவால்களின் தன்மை மாறிவிட்டது. மேலும் இப்போது அமைச்சகம், முன்பு இருந்ததைவிட விரைவாகப் பதிலளிக்க உள்ளது” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு (விரிவான பேட்டி நாளை வெளியிடப்படும்) நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும், அதிகப்படியான விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை போன்ற பல்வேறு காரணங்களினால் மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் குறைவாக இந்தியாவில் இருந்தாலும்,  – கோவிட் -19 சூழ்நிலை மிகவும் கவலை அளிக்கிறது என்று கூறினார். சமூக இடைவெளி முதல் மாஸ்க் பயன்பாடு மற்றும் அடிக்கடி கை கழுவுதல் வரை தொற்றுநோயைக் கையாள்வதில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நீங்கள் இதைச் செய்கிறீர்கள் என்றும் குறிப்பிட்டார்.

“சரியான தடுப்பூசி இல்லை, பேண்டமிக் முடிவதற்கான தெளிவான தேதி இல்லை, குணப்படுத்தப்பட்ட மக்கள் மீண்டும் பாதிக்கப்படுகிறார்கள் என சில இடங்களில் அறிக்கைகள் வந்துள்ளன… சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் மனதில் பெரும் குழப்பங்கள் உருவாகின்றன” என்று அவர் கூறினார். இது பொருளாதார நடவடிக்கைகளை மோசமாகப் பாதித்துள்ளது. குறிப்பாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 55 சதவிகிதம் பங்குகொண்ட சேவைத் துறையைப் பெரிதும் பாதித்துள்ளது. கோவிட் -19-ஆல் பாதிக்கப்பட்ட பல தொழில்களில் உற்பத்தித் துறைகள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பின.

தொழிலாளர் தீவிர தொழில்களான ஆடை உற்பத்தி, உள்நாட்டுத் தேவையை விட வெளிநாட்டுத் தேவை அதிகரிக்கும் வேகத்துடன் ஸ்டீல் போன்ற ஏற்றுமதி துறைகளும் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பணிக்குத் திரும்புகின்றனர் என்று இந்தியா இன்க் பத்திரிகைக்குத் நிர்மலா தெரிவித்துள்ளார். “இது அமைச்சகத்தின் கண்டுபிடிப்புகளுடன் பொருந்துகிறது. விவசாயம் மட்டுமல்ல, விவசாயம் அல்லாத பிற கிராமப்புற நடவடிக்கைகளும் வலுவானவை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று மாதங்களில், இழந்தவற்றின் பெரும் பகுதிகளைப் பொருளாதாரம் மீட்டெடுத்துள்ளது என்பதை Broad high-frequency indicators வெளிப்படுத்துகின்றன. இது ஜிஎஸ்டி வருவாயில் பிரதிபலிக்கிறது அதாவது, 2019 ஆகஸ்ட் மாதத்தைவிட இந்த ஆண்டு ஆகஸ்டில் 88 சதவீதமாக இருக்கிறது. ஆகஸ்டில் உருவாக்கப்பட்ட மின் வழி பில்கள் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியின் மதிப்பில் 97.2 சதவீதமாக இருந்தன; முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 50-க்கும் மேற்பட்ட PMI விரிவாக்கத்தைக் குறிக்கிறது.

ஆனால், இரண்டாவது காலாண்டில் 4.5 சதவிகிதம் (Ficci) முதல் 13.7 சதவிகிதம் (Goldman Sachs) வரை, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுருக்கத்தின் பல்வேறு மதிப்பீடுகள் பிரதமருக்கு மிகப் பெரிய நிதி ஊக்கத்தைப் பரிந்துரைக்கப் பலரைத் தூண்டியுள்ளது. பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா (Garib Kalyan Yojana) மற்றும் ஆத்மநிர்பர் பாரத் (AtmaNirbhar Bharat) இடையே, அரசாங்கத்தின் கூடுதல் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.2 சதவிகிதம் மட்டுமே. ஜூன்-ஜூலை மாதங்களில் தலைமை பொருளாதார ஆலோசகர் அலுவலகத்தின் நிதி ஆயோக் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு பிரதமருக்கு அளித்த விளக்கங்களில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவிகிதம் வரை கூடுதல் செலவு செய்யப் பரிந்துரைத்துள்ளன.

இடர் தவிர்ப்பு (risk-aversion) குறித்து அரசாங்கத்தில் இரு பிரிவினருக்குள் அமைதியின்மை நிலவுகிறதா என்றதற்கு , “இல்லை. அத்தகைய தயக்கம் ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.. நிச்சயமாக, நான் நேரம் கொடுப்பேன்” என்றார் நிதியமைச்சர் சீதாராமன்.

பயனாளிகளை வரையறுப்பதில் உள்ள சவால், கட்டுப்பாட்டுக்கு ஒரு காரணமா என்று கேட்டதற்கு, மக்களின் கணக்குகளைப் பணம் சென்று அடைவது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று டிபிடி-க்கு (Direct Benefit Transfer) நிதியமைச்சர் கூறினார். மேலும், ஆத்மநிர்பார் பேக்கேஜ் (AtmaNirbhar package) ஒன்றுக்கு மட்டுமல்ல, பல துறைகளுக்குப் பலவிதமான விஷயங்களை உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார். “நாங்கள் அறிவித்ததைப் போல, 24 மணி நேரத்திற்குள் அது தீர்ந்துவிட்டது என்பதல்ல. உண்மையில், அது இப்போது கூட இருக்கிறது” என்றார்.

100 சதவிகித அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் (Emergency Credit Line Guarantee Scheme) தரவுகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள சீதாராமன், பொது மற்றும் தனியார்த் துறை வங்கிகள் 1,77,353 கோடி ரூபாய் கடன்களை அனுமதித்துள்ளன, அவற்றில் 1,25,425 கோடி ரூபாய் ஏற்கனவே எம்.எஸ்.எம்.இ (MSME) மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

முன்னணி துறைகளான சுற்றுலா, ஹாஸ்ப்பிட்டாலிட்டி, ஹோட்டல் மற்றும் உணவகங்கள் கோவிட் -19-ஆல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் கூறினார். சுற்றுலாப் பயணம் வெளிநாட்டினரிடையே எந்த அதிர்வுகளையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், சுற்றுலா சீசன் சில வாரங்களில் தொடங்குகிறது. உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக மெட்ரோ நகரங்களில், நீண்ட கால லாக் டவுனுக்குப் பின்னர் வார இறுதி பயணங்களை நாடுகிறார்கள். “ஹோட்டல் மற்றும் உணவகங்களில், உணவு வாங்கிச் செல்வதும் அதிகரித்து வருகிறது” என்று அவர் கூறினார்.

இரண்டு மாதங்களில் பட்ஜெட் பட்டியல் தொடங்கவுள்ள நிலையில், தனது மேஜையில் மிகவும் அழுத்தமான விஷயம் என்ன என்று கேட்டதற்கு, 2019 டிசம்பரில் அடையாளம் காணப்பட்ட ரூ .111 லட்சம் கோடி முதலீட்டைக் கொண்ட 6,000-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களின் தொகுப்பை அவர் குறிப்பிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Nirmala sitharaman interview on covid vaccine gdp and economy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X