Nirmala Sitharaman speech updates: ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமான் ஐந்தாம் கட்ட பொருளாதார நடவடிக்கையை இன்று அறிவிக்கிறார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மருத்துவம், கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள், வணிகம் பொதுத்துறை நிறுவனங்கள்,
கொரோனா காலத்தில் வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏழு அறிவிப்புகள் இன்று வெளியாக உள்ளன.
நிலம், தொழிலாளர், பணப்புழக்கம், சட்டங்கள் போன்ற அறிவிப்புகள் கடந்த 4 நாட்களாக வெளியிடப்பட்டன.
நேற்று, நிலக்கரி, கனிம வளம், பாதுகாப்பு, விமான போக்குவரத்து, விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற முக்கிய துறைகளில் பொருளாதார அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் பல வணிக வாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார மாற்றத்திற்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் பங்களிப்பு முறையில் ஆராய்ச்சி அணு உலைகள் ஏற்படுத்துதல், விண்வெளி நடவடிக்கைகளில் தனியார் பங்களிப்பை ஊக்குவித்தல், யூனியன் பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை தனியார்மயமாக்கல், இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தல் போன்ற முக்கிய பொருளாதார அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
FM Nirmala Sitharaman Updates : நிர்மலா சீதாரமான் ஐந்தாம் கட்ட பொருளாதார நடவடிக்கையை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதியளித்தபடி நிர்மலா சீதாராமனின் பொருளாதார அறிவிப்புகள் ரூ .20 லட்சம் கோடியாக இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,"அரசாங்கத்தின் ஐந்து கட்ட அறிவிப்புகள் ரூ .3.22 லட்சம் கோடி அளவில் தான் உள்ளது. அதாவது,மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6%. இது தொடர்பாக நிதியமைச்சருடன் நீண்ட விவாதத்திற்கும் நான் தயாராக இருக்கிறேன், "என்று தெரிவித்தார்.
இந்த இக்கட்டான சூழலில், நிதியமைச்சரிடமிருந்து தீவிரத்தன்மையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்; காங்கிரசுக்கு எதிராக அவர் கூறியது அற்பமானது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சுயசார்பு திட்டத்தின்
முதல் கட்ட அறிவிப்பு ரூ 5,94,550 கோடி.
இரண்டாம் கட்ட அறிவிப்பு ரூ 3,10000 கோடி.
மூன்றாம் கட்ட அறிவிப்பு ரூ.1,50,000 கோடி.
நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அறிவிப்பு ரூ. 48,100 கோடி.
மொத்த மதிப்பு ரூ 20.97 லட்சம் கோடி
மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட கடன் வரம்பில் 14% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் மாநிலங்கள் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் கடன் வாங்கும் திறன் 3% இல் இருந்து 5 % ஆக உயர்த்தப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மாநிலங்கள் கடன் பெறுவதற்கான உச்சவரம்பு உயர்த்தப்படுவதன் மூலம் ரூ 4.28 லட்சம் கோடி கூடுதல் கடனாக மாநிலங்களுக்கு கிடைக்கும்.
மத்திய அரசைப் போலவே, மாநில அரசும் வருவாய் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்திற்கான மாநில வரிப்பங்கீடு ரூ. 46,038 கோடி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக ரூ 12,390 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலங்களுக்கு ரூ. 11,092 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஊரடங்கு உத்தரவால் கம்பெனிகள் திவாலாகும் சூழ்நிலை ஏற்பட்டால், அது தொடர்பான நடவடிக்கைகள் ஓராண்டிற்கு நிறுத்திவைக்கப்படும். சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்பெற திவால் சட்டத்தில் தளர்வு அளிக்கப்படும்.
ஒரு கோடி ரூபாய் வரை வசூல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் மட்டும் நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்படும். நிறுவனங்கள் மீதான 7 விதி மீறலுக்கான நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன. 5 விதிமீறல்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.
ஏற்கனவே பள்ளிக் கல்விக்கு 3 சேனல்கள் உள்ள நிலையில், கொரோனா பெருந்தொற்று ஊரடங்கின் போது மாணவர்கள் கல்வி கற்க, 1 முதல் 12-ஆம் வகுப்புவரை தனித்தனியாக 12 டிவி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும். செவித்திறன் & பார்வைத்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, மின்- பாடங்கள் (இ-புக்) உருவாக்கப்படும். ஆன்லைன் படிப்புகளை தொடங்க 100 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். டிடிஎச் நிறுவனங்கள் தினமும் 4 மணிநேரம் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கேட்டுக் கொள்ளப்படுவர்.
சுகாதாரத்துறை ஒதுக்கீட்டின் கீழ் மாநிலங்களுக்கு ஏற்கனவே ரூ.4113 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிர்மலா சீத்தாராமன், கொரோனா பரிசோதனை கிட் மற்றும் ஆய்வகங்களுக்காக 550 கோடி நிதியை மேலும் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.
கொரோனா தடுப்பிற்காக 11.08 கோடி ஹைட்ரோகுளோரகுயின் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கொரோனா பாதுகாப்பு உடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக 40,000 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் இந்த திட்டத்தின்கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில், ஜன் தன் வங்கி கணக்குகள் வைத்துள்ள 20 கோடி பேருக்கு ரூ 10025 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டது. 2.2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ 3,950 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 6.81 கோடி பேருக்கு இலவச எரிவாயு உருளை வழங்கப்பட்டுள்ளது. 12 லட்சம் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்கூட்டியே பணத்தைப் பெற்றுள்ளனர் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மருத்துவம், கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள், வணிகம் பொதுத்துறை நிறுவனங்கள்,
கொரோனா காலத்தில் வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏழு அறிவிப்புகள் இன்று வெளியாக உள்ளன.
நேற்று, நிலக்கரி, கனிம வளம், பாதுகாப்பு, விமான போக்குவரத்து, விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற முக்கிய துறைகளில் பொருளாதார அறிவிப்புகளை வெளியிட்டார்.
பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், புலம்பெயர்ந்த நகர்ப்புற ஏழைகள், சுய தொழில் செய்யும் சிறு வர்த்தகர்கள், சிறு விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் ,ஆகியோரைப் பொருளாதார நிலையில் உயர்த்துவதற்கானநடவடிக்கைகளை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights