நிர்மலா சீதாராமனின் 5 கட்ட பொருளாதார அறிவிப்புகள் ரூ.3.22 லட்சம் கோடி தான் – காங்கிரஸ்

FM Nirmala Sitharaman Press Conference: ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமான் நான்காம் கட்ட பொருளாதார நடவடிக்கையை இன்று அறிவிக்கிறார்.

Nirmala Sitharaman speech updates: ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமான் ஐந்தாம் கட்ட பொருளாதார நடவடிக்கையை இன்று அறிவிக்கிறார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மருத்துவம், கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள், வணிகம் பொதுத்துறை நிறுவனங்கள்,
கொரோனா காலத்தில் வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏழு அறிவிப்புகள் இன்று வெளியாக உள்ளன.

நிலம், தொழிலாளர், பணப்புழக்கம், சட்டங்கள் போன்ற அறிவிப்புகள் கடந்த 4 நாட்களாக வெளியிடப்பட்டன. 

நேற்று, நிலக்கரி, கனிம வளம், பாதுகாப்பு, விமான போக்குவரத்து, விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற முக்கிய துறைகளில் பொருளாதார அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் பல வணிக வாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார மாற்றத்திற்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் பங்களிப்பு முறையில் ஆராய்ச்சி அணு உலைகள் ஏற்படுத்துதல், விண்வெளி நடவடிக்கைகளில் தனியார் பங்களிப்பை ஊக்குவித்தல், யூனியன் பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை தனியார்மயமாக்கல், இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தல் போன்ற முக்கிய பொருளாதார அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

FM Nirmala Sitharaman Updates : நிர்மலா சீதாரமான் ஐந்தாம் கட்ட பொருளாதார நடவடிக்கையை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.


16:12 (IST)17 May 2020

ஐந்து கட்ட பொருளாதார அறிவிப்புகள் ரூ .3.22 லட்சம் கோடி தான் – காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதியளித்தபடி நிர்மலா சீதாராமனின் பொருளாதார அறிவிப்புகள்  ரூ .20 லட்சம் கோடியாக இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.  இது குறித்து அவர் கூறுகையில்,”அரசாங்கத்தின் ஐந்து கட்ட அறிவிப்புகள்  ரூ .3.22 லட்சம் கோடி அளவில் தான் உள்ளது. அதாவது,மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6%. இது தொடர்பாக நிதியமைச்சருடன் நீண்ட விவாதத்திற்கும் நான் தயாராக இருக்கிறேன், “என்று தெரிவித்தார்.

இந்த இக்கட்டான சூழலில், நிதியமைச்சரிடமிருந்து தீவிரத்தன்மையை நாங்கள்  எதிர்பார்க்கிறோம்; காங்கிரசுக்கு எதிராக அவர் கூறியது அற்பமானது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

12:49 (IST)17 May 2020

நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அறிவிப்பு ரூ. 48,100 கோடி.

சுயசார்பு திட்டத்தின்

முதல் கட்ட அறிவிப்பு ரூ 5,94,550 கோடி.

இரண்டாம் கட்ட அறிவிப்பு ரூ 3,10000 கோடி.

மூன்றாம் கட்ட அறிவிப்பு ரூ.1,50,000 கோடி.

நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அறிவிப்பு ரூ. 48,100 கோடி.

மொத்த மதிப்பு ரூ 20.97 லட்சம் கோடி

12:47 (IST)17 May 2020

ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் 20,97,053 கோடி

12:28 (IST)17 May 2020

ரூ 4.28 லட்சம் கோடி கூடுதல் கடனாக மாநிலங்களுக்கு கிடைக்கும்.

மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட கடன் வரம்பில் 14% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் மாநிலங்கள் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் கடன் வாங்கும் திறன் 3% இல் இருந்து 5 % ஆக உயர்த்தப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மாநிலங்கள் கடன் பெறுவதற்கான உச்சவரம்பு உயர்த்தப்படுவதன் மூலம் ரூ 4.28 லட்சம் கோடி கூடுதல் கடனாக மாநிலங்களுக்கு கிடைக்கும்.

12:27 (IST)17 May 2020

மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட போதிலும் மாநில அரசுக்கான வருவாய் வழங்கப்பட்டுள்ளது

மத்திய அரசைப் போலவே, மாநில அரசும் வருவாய் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்திற்கான மாநில வரிப்பங்கீடு ரூ. 46,038 கோடி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக ரூ 12,390 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலங்களுக்கு ரூ. 11,092 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

12:14 (IST)17 May 2020

பெரும்பாலான பொதுத்துறை நிறுவங்களில் தனியார் முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்படும்

சில பொதுத்துறை நிறுவனங்கள் தவிர்த்து பிற பொதுத்துறை நிறுவங்களில் தனியார் முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.  

12:05 (IST)17 May 2020

திவால் சட்டத்தில் தளர்வு அளிக்கப்படும்

ஊரடங்கு உத்தரவால் கம்பெனிகள் திவாலாகும் சூழ்நிலை ஏற்பட்டால், அது தொடர்பான நடவடிக்கைகள் ஓராண்டிற்கு நிறுத்திவைக்கப்படும். சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்பெற திவால் சட்டத்தில் தளர்வு அளிக்கப்படும். 

ஒரு கோடி ரூபாய் வரை வசூல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் மட்டும் நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்படும். நிறுவனங்கள் மீதான 7 விதி மீறலுக்கான நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன. 5 விதிமீறல்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.  

12:02 (IST)17 May 2020

ஒருங்கிணைந்த பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்

பொது சுகாதாரத்தை உறுதிப்படுத்த ஊரகம் & நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு, மாவட்டத்திலும் தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார் . 

 

11:58 (IST)17 May 2020

1 முதல் 12 வகுப்பு வரை 12 டி.வி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும்

ஏற்கனவே பள்ளிக் கல்விக்கு 3 சேனல்கள் உள்ள நிலையில், கொரோனா பெருந்தொற்று ஊரடங்கின் போது மாணவர்கள் கல்வி கற்க,  1 முதல் 12-ஆம் வகுப்புவரை தனித்தனியாக 12 டிவி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும்.  செவித்திறன் & பார்வைத்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, மின்- பாடங்கள் (இ-புக்) உருவாக்கப்படும். ஆன்லைன் படிப்புகளை தொடங்க 100 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். டிடிஎச் நிறுவனங்கள் தினமும் 4 மணிநேரம் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கேட்டுக் கொள்ளப்படுவர்.

11:53 (IST)17 May 2020

பரிசோதனை கிட் மற்றும் ஆய்வகங்களுக்காக மேலும் 550 கோடி நிதி ஒதுக்கீடு

சுகாதாரத்துறை ஒதுக்கீட்டின் கீழ் மாநிலங்களுக்கு ஏற்கனவே ரூ.4113 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிர்மலா சீத்தாராமன், கொரோனா பரிசோதனை கிட் மற்றும் ஆய்வகங்களுக்காக 550 கோடி நிதியை மேலும் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.

கொரோனா தடுப்பிற்காக 11.08 கோடி ஹைட்ரோகுளோரகுயின் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கொரோனா பாதுகாப்பு உடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

11:45 (IST)17 May 2020

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக 40,000 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக 40,000 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட  புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் இந்த திட்டத்தின்கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.   

11:43 (IST)17 May 2020

மாநில அரசுகளுக்கு இதுவரை 15,000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநில அரசுகளுக்கு இதுவரை 15,000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 4,113 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு  விடுவிப்பு செய்துள்ளகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.   

11:35 (IST)17 May 2020

20 கோடி பேருக்கு ரூ 10025 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.

ஊரடங்கு காலத்தில், ஜன் தன் வங்கி கணக்குகள் வைத்துள்ள 20 கோடி பேருக்கு ரூ 10025 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டது.  2.2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ 3,950 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 6.81 கோடி பேருக்கு இலவச எரிவாயு உருளை வழங்கப்பட்டுள்ளது. 12 லட்சம் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்கூட்டியே பணத்தைப் பெற்றுள்ளனர் என்று  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

11:34 (IST)17 May 2020

ஏழு அறிவிப்புகள் இன்று வெளியாக உள்ளன

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மருத்துவம், கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள், வணிகம் பொதுத்துறை நிறுவனங்கள்,
கொரோனா காலத்தில் வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏழு அறிவிப்புகள் இன்று வெளியாக உள்ளன.

நேற்று, நிலக்கரி, கனிம வளம், பாதுகாப்பு, விமான போக்குவரத்து, விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற முக்கிய துறைகளில் பொருளாதார அறிவிப்புகளை வெளியிட்டார். 

11:32 (IST)17 May 2020

நெருக்கடியான சூழலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

சர்வதேச அளவிலான இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் மீண்டு வருவோம். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.    

11:24 (IST)17 May 2020

மாநில அரசுகளுக்கு நிதி அமைச்சர் பாராட்டு

மத்திய, மாநில அரசுகளுடன், உணவுக் கழகமும் இணைந்து மக்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்து வருகிறது. ஏழைகளுக்கு உணவு பொருட்களை கொண்டு சேர்த்த மாநில அரசுகளுக்கு நிதி அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்

11:14 (IST)17 May 2020

5 ஆவது நாளாக நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து செய்தியாளர்களை புதுடில்லியில் சந்தித்து வருகிறார்.

FM Nirmala Sitharaman Updates : கொரோனா பெருந்தொற்றால் முடங்கிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாரதப்பிரதமர் ஒட்டுமொத்த சிறப்புப் பொருளாதாரத் திட்டமாக ரூ. 20 லட்சம் கோடி, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் கொண்ட திட்டத்தைக் கடந்த மே 12ஆம் தேதி அறிவித்தார். அத்துடன், இந்தியா தன்னையே சார்ந்திருப்பதற்கு அறைகூவல் விடுக்கும் வகையில், தற்சார்பு இந்தியா பிரகடனம் (ஆத்ம நிர்பார் பாரத் அபியான் என்ற கோட்பாட்டையும் அவர் அறிவித்தார்.

பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், புலம்பெயர்ந்த நகர்ப்புற ஏழைகள், சுய தொழில் செய்யும் சிறு வர்த்தகர்கள், சிறு விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் ,ஆகியோரைப் பொருளாதார நிலையில் உயர்த்துவதற்கானநடவடிக்கைகளை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nirmala sitharaman live updates fm press conference day 5 stimulus package economic relief middle class

Next Story
ஆம்பன் புயல் Updates: வங்கக்கடலில் சூறாவளிப் புயல், இன்று மையம் கொள்கிறதுcyclone fani
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com