நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை முடித்த பிறகு, தென் மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் சிலர், நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து அவருடன் உரையாடினர். அப்போது எம்.பி ஒருவர், பட்ஜெட் வாசிக்கும் போது கிளாஸில் வைத்து குடித்துக்கொண்டிருந்த பானத்தை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், ஒரு கிளாஸில் தேங்காய் தண்ணீரும், மற்றொரு கிளாஸில் எலக்டரால் பவுடர் வைத்திருந்தாகவும் தெரிவித்தார். 90 நிமிட பட்ஜெட் உரையில், இரண்டு பானங்களையும் முழுமையாக குடித்து முடித்தார்.
பட்ஜெட் விமர்சனங்கள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்கையில், சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தனது விமர்சனங்களை கூறிய வண்ணம் இருந்தனர்.
திரிணாமுல் காங்கிரஸின் சவுகதா ராய், பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று கூறியபோது, திமுகவின் தயாநிதி மாறன் அதை “குஜராத் பட்ஜெட்” ஆக கருதினார். இதை ஏன் யூனியன் பட்ஜெட் என கூறுகின்றனர். குஜராத் பட்ஜெட் என்று கூறலாமே என்றார்.
தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ 1.40 லட்சம் கோடி என்றும், ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதிலிருந்து இது அதிகபட்ச தொகை என்றும் சீதாராமன் கூறினார். இதற்கான முழு அங்கீகாரம் மாநில அரசுக்கு வழங்க வேண்டும் மாறன் தெரிவித்தார். அப்போது பேசிய சிவசேனா தலைவர் விநாயக் ராவத், அதனை மாநிலங்களுக்குத் திரும்ப வழங்க வேண்டும் என்றார்.சீதாராமன் வரி செலுத்துவோரைப் பாராட்டியபோது, அதை செலுத்துவதை தவிர அவர்களுக்கு வேறு வழி உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
ட்ரெண்டான பாஜக வேட்பாளர்
உ.பி. தேர்தலில் லக்னோவில் உள்ள சரோஜினி நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமலாக்கத் துறை இணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங், இணையதளத்தில் ட்ரெண்டாகியுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து வழக்கறிஞராக மாறிய அவரது சகோதரி அபா சிங், தனது அண்ணன் சிவனை பிரார்த்தனை செய்வது, பூங்காவில் ஸ்லோ மோஷனில் நடந்து செல்வது, பத்திரிக்கை தாள் படிப்பது, விவாதங்களில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் பாகுபலி தீம் மியூசிக்குடன் கூடிய வீடியோவை ஷேர் செய்திருந்தார். தொலைகாட்சி நிறுவனம் தயாரித்த வீடியோவை பகிர்ந்த அபா சிங், “இதோ ராஜேஷ்வர் சிங், முன்னாள் #ED” என்ற ஹேஷ்டேக்-வுடன் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil