Advertisment

மேற்கு வங்கத்திற்கு ஸ்கெட்ச் போட செல்லும் அமித் ஷா, நட்டா; தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் நிர்மலா சீதாராமன்

பா.ஜ.க-வின் வியூகத்தை ஆய்வு செய்ய அமித் ஷா, ஜேபி நட்டா கொல்கத்தா சென்றுள்ளனர். தென் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமான தூத்துக்குடியை நிர்மலா சீதாராமன் பார்வையிடுகிறார்.

author-image
WebDesk
New Update
Nirmala Sitharaman to visit flood hit TN district and Amit Shah JP Nadda Kolkata to review BJP Bengal strategy Tamil News

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் பிடியைத் தகர்ப்பதில் இதுவரை பா.ஜ.க வெற்றிபெறவில்லை.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Nirmala-sitharaman | tuticorin: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்ட சில நாட்களுக்குப் பிறகு, இன்று (செவ்வாய்க்கிழமை) தென் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமான தூத்துக்குடிக்கு பாதிப்புகளை ஆய்வுசெய்ய  வருகை தருகிறார். 

Advertisment

தூத்துக்குடிக்கு இன்று காலை செல்லும் அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அந்தோணியார் பாளையத்தில் ஏற்பட்டுள்ள சாலை சேதம், கோரம்பள்ளம் குளம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு செய்ய உள்ளார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Today in Politics: Amit Shah, JP Nadda in Kolkata to review BJP’s Bengal strategy; Nirmala Sitharaman to visit flood-hit TN district

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்து, மழையால் கால்நடைகளையும், தங்களது உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கும், விவசாயிகளுக்கும் ரூ.58.14 லட்சம் இழப்பீடு வழங்கினார். ஏரல் டவுன் பஞ்சாயத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரியில் 8-வது நாளாக செவ்வாய்க்கிழமை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு, சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டார்.

மாநில அரசின் வெள்ள மேலாண்மை நடவடிக்கை நிகழ்ந்து வரும் இந்த நேரத்தில் மாநிலத்தின் ஆளும் கட்சியும், இந்திய கூட்டணியின் முக்கிய கட்சியுமான தி.மு.க-வை குறிவைக்க பா.ஜ.க-வை அனுமதித்துள்ளது. தமிழக தேர்தலில் போட்டியிட பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. ஆனால் திராவிடக் கட்சிகளின் பிடியைத் தகர்ப்பதில் இதுவரை வெற்றிபெறவில்லை. 

இந்த நிலையில், ‘‘ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஐ.டி. நிறுவனங்களில் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனால் சிலர் இந்தி, இந்தி என கூறுகின்றனர். உ.பி மற்றும் பிஹாரில் இந்தியை மட்டும் கற்றவர்கள் தமிழ்நாட்டுக்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும்தான் வருகின்றனர். இந்தியை மட்டும் கற்றால் இதுதான் நிலைமை’’ என்று தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் கூறும் பழைய ஒன்று இணையத்தில் வைரலாகிறது. அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

வங்காளத்தில் பா.ஜ.க ஸ்கெட்ச் 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பா.ஜ.க தலைவர் ஜேபி நட்டாவும் கொல்கத்தாவில் மேற்கு வங்கத்தில் கட்சியின் அமைப்பை மதிப்பிடுவதற்கும், மேற்கு வங்கத்தில் கட்சியின் எதிர்கால செயல்பாட்டு திட்டங்களை தயாரிப்பதற்கும் இன்றைய தினம் கொல்கத்தா சென்றுள்ளனர். 

அமித் ஷாவும் ஜே.பி நட்டாவும் இன்று காலை வடக்கு கொல்கத்தாவின் ஜோராசங்கோவில் உள்ள குருத்வாராவிற்கும் தெற்கு கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோயிலுக்கும் செல்வார்கள். பிற்பகலில் அவர்கள் மாநில தலைமையுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். அதன்பிறகு, இரு தலைவர்களும் இரவு டெல்லிக்கு புறப்படுவதற்கு முன், தேசிய நூலகத்தில் சமூக ஊடக தன்னார்வலர் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். 

தேர்தலுக்கு முன்னதாக உட்கட்சி பூசலை முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு அலகாக செயல்பட தலைவர்கள் மாநில தலைமைக்கு வலுவான செய்தியை கொடுக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாங்குரா எம்பி சுபாஸ் சர்க்கார் உட்பட கட்சித் தலைவர்களின் ஒரு பகுதிக்கு எதிராக பா.ஜ.க தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். சமீபத்தில் பா.ஜ.க தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ராவும் மாநில தலைமையை விமர்சித்தார்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் இருந்து மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அமைப்புரீதியிலான பின்னடைவை முறியடித்து, 2019 ஆம் ஆண்டில் தான் வென்ற 18 மக்களவைத் தொகுதிகளை தக்கவைத்துக்கொள்வதை உறுதிசெய்ய பா.ஜ.க எதிர்பார்க்கிறது. ஏப்ரலில் மாநிலத்தில் இருந்து 35 மக்களைவை தொகுதிகளில் வெற்றிபெற இலக்கு அமித் ஷா நிர்ணயித்திருந்தார். ஆனால் மாநில அமைப்பு இருக்கும் நிலையில் தற்போது கடினமான பணியாக தெரிகிறது. ஏறக்குறைய கிட்டத்தட்ட ஆதிக்கம் செலுத்தும் இந்தி மையப்பகுதியில் கட்சி ஏற்கனவே அதிகபட்சமாக இருப்பதால், மகாராஷ்டிரா, தென் மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கம் மட்டுமே அதன் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடிய இடங்களாகும். அதன் மூலம் அதன் தேசிய செல்வாக்கையும் அதிகரிக்க முடியும்.

பிரதமரின் அட்டவணை

குரு கோவிந்த் சிங்கின் மகன்களான ஜோராவர் சிங் மற்றும் ஃபதே சிங் ஆகியோரின் தியாகத்தை நினைவுகூரும் “வீர் பால் திவாஸ்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று  பங்கேற்கிறார். காலை 10.30 மணிக்கு பாரத் மண்டபத்தில் இருக்கும் பிரதமர், இளைஞர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Nirmala Sitharaman Tuticorin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment