தெலுங்கானாவில், காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பீர்கூரில் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஏன் வைக்கவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவில் சப்ளை துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான், தெலுங்கானாவில் உள்ள காமெரெட்டி மாவட்டத்தில் உள்ள பீர்கூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கே ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை என்று அம்மாநில சிவில் சப்ளை துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீல் இடம் மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியில் மத்திய அரசின் எவ்வளவு வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீல் அதற்கு தெரியாது என்று கூறினார்.
மாவட்ட ஆட்சியரிடம் திருப்திகரமான பதில் கிடைக்காததால் வேதனை தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரை மணி நேரத்தில் விவரத்தைக் கண்டறிந்து விவரத்தை தெரிவிக்கும்படி உத்தரவிட்டார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீல் இடம், “நீங்கள் ஒரு மாவட்ட ஆட்சியராக, பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த படத்தை யாரும் அகற்றக்கூடாது, கிழிக்கக் கூடாது. சேதப்படுத்தக் கூடாது. மக்களுக்கும் அனைத்தையும் இலவசமாக அளிக்கும் பிரதமரின் ஒரு போட்டோ வைப்பதற்கு எதிர்ப்பது ஏன்? ஏன் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கவில்லை” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”