இரவு 7.45 மணிக்கு, 10-12 கார்கள் கொண்ட வாகன அணிவகுப்பு, கோடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கரவுன் பகுதிக்குள் நுழைகிறது, ஒலிபெருக்கியில் பா.ஜ.க-வின் “ஆப் கி பார், 400 பார்” கோஷம் ஒலித்தது. வெள்ளை நிற சொகுசு காரில் அமர்ந்திருக்கும் பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே, வாகனத்தில் இருந்து இறங்கியவுடன் ஆதரவாளர்களால் சூழப்பட்டார்.
ஆங்கிலத்தில் படிக்க: ‘RSS, Christian missionaries must join hands to stop love, land jihad of Bangladeshi infiltrators’: Nishikant Dubey
ஆதரவாளர்களில் ஒருவர், அவர் ஒரு காலத்தில் மாநிலத்தில் ஆளும் ஜே.எம்.எம் ஆதரவாளராக இருந்ததாகவும், இப்போது பா.ஜ.க-வின் பின்னால் உறுதியாக இருப்பதாகவும் அறிவிக்கிறார். ஏன் (நடிகராக மாறிய அரசியல்வாதி) சத்ருகன் சின்ஹா தன்னுடன் இல்லை என்று அவர் துபேயிடம் கேட்கும் போது, எம்.பி கிண்டல் செய்கிறார்: “அவர் வேறொரு கட்சியில் சேர்ந்துள்ளார் (சின்ஹா இப்போது டி.எம்.சி-யில் இருக்கிறார்). நான் அவரை இங்கு அழைக்க வேண்டுமா? அவர் இன்னும் என் நண்பராக இருக்கிறார்” என்று கூறினார்.
ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மற்றொரு நடிகரும், அரசியல்வாதியுமான மனோஜ் திவாரி, பா.ஜ.க-வின் வடகிழக்கு டெல்லி எம்.பி., அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார், கூட்டத்திலிருந்து பரவலான கரவொலியுடன் வந்தார். கூட்டத்தில் பேசிய திவாரி, “நாம் நிஷிகாந்த்ஜியை நான்காவது முறையாக தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று கூறுகிறார்.
பொதுக் கூட்டத்தின் ஓரத்தில், நிஷிகாந்த் துபே தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுடன் தான் நாடாளுமன்றத்தில் இருந்த நேரம், தொகுதிக்கான முன்னுரிமைகள் மற்றும் ஜார்கண்டில் ஊழல் பற்றி பேசுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.
கரௌன் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பிரச்சினைகளில் நீங்கள் போதுமான கவனம் செலுத்தவில்லை என்று புகார் கூறுகின்றனர்… ஆனால், நீங்கள் இன்னும் பிரபலமாக இருக்கிறீர்கள். இதைப் பற்றி என்ன கூறுகிறீர்கள், உங்கள் வேலை அல்லது உங்கள் அணுகுமுறை பற்றி கூறுங்கள்?
ஆனால், மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? புகார்கள் இல்லாத ஒரு வீட்டைக் காட்டுங்கள்... எனது தொகுதியில் குறைந்தது ஒரு லட்சம் பேரையாவது எனக்குப் பெயராகத் தெரியும், அவர்களை முகம் பார்த்து அடையாளம் காண முடியும். நான் எப்போதும் (பிரதமர்) நரேந்திர மோடி ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் போன்றவர் என்றும், நான் "பர்ச்சுனே கி துகான்" (சிறிய மளிகைக் கடை) போன்றவர் என்றும் கூறுவேன். பிரதமர் எதைக் கொடுத்தாரோ, அதை என் தொகுதிக்கு சில்லறையாகப் பெற்றேன். அவர் எங்களுக்கு ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கினார், அவற்றில் சில முடிக்கப்பட்டுள்ளன, மற்றவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோடாவில் எய்ம்ஸ் மற்றும் விமான நிலையம் கட்டும் பணி தொடங்கியுள்ள நிலையில், மற்ற தொகுதிகளுக்கு அதே மாதிரி கிடைப்பதாக தெரியவில்லையே?
இந்த தொகுதி பின்தங்கிய நிலையில் இருந்தது, பின்னர் பிரதமர் ‘கிழக்கு கொள்கை’ கொண்டு வந்தார். நான் சொன்னது போல், திட்டங்களை இங்கு பெறுவதற்கு சில்லறை விற்பனையாளராக அனைத்து ஜுகாத்களையும் செய்தேன். எய்ம்ஸ் மற்றும் விமான நிலையத்தின் பெருமை மோடிக்கும் பா.ஜ.க-வுக்கும்தான் சேர வேண்டும். மற்றொரு சாத்தியமான காரணம், கோடா என்பது சிவபெருமானின் நிலம் மற்றும் பிரதமரும் ஒரு சிவ பக்தர்.
உங்கள் பகுதியில் உள்ள மிகப்பெரிய சவால் என்ன?
பிரதமரைப் போலவே, நானும் அந்தப் பகுதியின் மக்கள்தொகை மாறிவிட்டது என்று கருதுகிறேன். 1947-ம் ஆண்டு முதல், ஜார்கண்ட் (முன்பு பீகாரின் ஒரு பகுதி) 2008-ல் ஒரு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட போதிலும் எல்லை நிர்ணயம் செய்ய முடியாத ஒரே மாநிலமாக உள்ளது. மாநிலம் முழுவதும் ஆதிவாசி மக்கள் தொகை 11% குறைந்துள்ளது - சந்தால் பர்கானாஸில் - பங்களாதேஷ் ஆலம்கிர் ஆலம் (கைது செய்யப்பட்ட அமைச்சர்) குடும்பம் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதால் முஸ்லிம் மக்கள் தொகை உயர்ந்துள்ளது.
இதை நான் பொறுப்புடன் சொல்கிறேன். பங்களாதேஷ் லவ், நில ஜிஹாதில் இருந்து பழங்குடியினரை காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ் மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பழங்குடி சமூகத்தில் உள்ள மதமாற்றப் பிரச்சினையை நாங்கள் பின்னர் கையாள்வோம், ஆனால், இப்போது ஆதிவாசி கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்கான நேரம்…
எமர்ஜென்சியின் போது, ஆர்.எஸ்.எஸ்., சி.பி.ஐ (எம்) உடன் இணைந்து, சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்ற அனைத்து காங்கிரஸ் எதிர்ப்பு சக்திகளுக்கும் உதவியது.
ஒரு பிரிவினர் பிரதமர் மோடியை ‘சர்வாதிகாரி’ என்று கூறுகிறார்களே?
சமூக வலைதளங்களில் அவர் தினமும் அவதூறு செய்யப்படுகிறார், ஆனால், எத்தனை பேர் (அதன் காரணமாக) சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்? மறுபுறம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், (மேற்கு வங்க முதல்வர்) மம்தா பானர்ஜி, (சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே தலைவர்) உத்தவ் தாக்கரே அல்லது (தமிழ்நாடு முதல்வர்) மு.க. ஸ்டாலினுக்கு எதிராக ஏதாவது ட்வீட் செய்ய முடியுமா? இவை வெறும் உதாரணங்கள். அப்படியானால், சர்வாதிகாரி யார் என்று சொல்லுங்கள்? நாங்கள் 16 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தோம் (மோடியின் கீழ் 10 மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாயின் கீழ் 6) ஆனால், அரசியலமைப்பைத் திருத்துவது பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை.
ஆனால், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் கூறுகிறார்களே?
இதற்குக் காரணம் உண்டு. என்.டி.ஏ முற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்திய இடங்களில், அந்த நபர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரானவர் என்ற கதையை எதிர்க்கட்சிகள் பரப்புகின்றன. இதேபோல், என்.டி.ஏ வேட்பாளர் எஸ்சி, எஸ்டி சமூகங்களைச் சேர்ந்தவர் என்றால், எதிர்க்கட்சிகள் ‘அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறுகின்றன. என்.டி.ஏ வேட்பாளர் ஓ.பி.சி சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால், பா.ஜ.க இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது என்று கதை மாற்றப்படுகிறது. எங்கே எதிர்க்கட்சிகள் வளர்ச்சிப் பிரச்னைகளைப் பேசுகின்றன?
ஆனால், பிரச்னைகளில் பிரதமர் அமைதியாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்களே?
எதிர்க்கட்சிகள் கூறும் கதைக்கு மட்டுமே பிரதமர் பதில் அளித்து வருகிறார். சுதந்திரம் அடைந்ததில் இருந்து, மோடியை விட பெரிய பேச்சாளர் அரசியலில் இல்லை. மக்கள் அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கிறார்கள்.
இனி அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் உண்டா?
788 நாடாளுமன்ற உறுப்பினர்களில் (நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்), சுமார் 780 பேர் எனது நல்ல நண்பர்கள். எனது கருத்தியல் உறுதிப்பாடு தெளிவாக உள்ளது. ஆனாலும், நான் சோனியா காந்தியுடன் நல்ல உறவைப் பகிர்ந்து கொள்கிறேன். (ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் மற்றும் ஹைதராபாத் எம்.பி.) அசாதுதீன் ஒவைசி வேறுபட்ட சித்தாந்தத்தை கடைபிடித்தாலும் நான் அவருடன் நல்ல நண்பர்களாக இருக்கிறேன். இங்கே சரிசெய்ய முடியாத வேறுபாடுகள் இல்லை.
டி.எம்.சி எம்.பி. மஹுவா மொய்த்ரா - அவருக்கு எதிரான உங்கள் மனு அவரை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வழிவகுத்தது - அல்லது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எப்படி?
இல்லை, எனக்கு மஹுவா மொய்த்ராவுடன் நட்பு இல்லை, அதனால்தான், அவர் நாடாளுமன்றத்தில் இல்லை. ராகுலிடமோ அல்லது பிரியங்கா காந்தியிடமோ நான் பேசியதில்லை.
முஸ்லிம் சமூகத்தை நம்பிக்கைக்கு கொண்டு செல்லும் திட்டம் பா.ஜ.க-விடம் உள்ளதா?
பா.ஜ.க முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. அது ஒரு கதை மட்டுமே. முஸ்லிம்கள் வெளியே வந்து மற்ற தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் (பா.ஜ.க வேட்பாளர்களுக்கு எதிராக) வாக்களிக்கிறார்கள், ஆனால் இங்கு அவர்களின் வாக்குப்பதிவு 45-46% மட்டுமே, அவர்கள் எனக்கு எதிராக வாக்களிக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.