மக்கள் சேவகனா இல்லை பாஜகவின் ஆதரவாளரா ? நிதி அயோக் துணை தலைவரை கேள்வி கேட்ட தேர்தல் ஆணையம்

இரண்டு நாட்களுக்குள் இதற்கு தகுந்த முறையில் விளக்கம் அறிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

இரண்டு நாட்களுக்குள் இதற்கு தகுந்த முறையில் விளக்கம் அறிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Niti Ayog Vice Chairman Rajiv Kumar

Niti Ayog Vice Chairman Rajiv Kumar

Niti Ayog Vice Chairman Rajiv Kumar : தேர்தல் நடைபெறுதலை ஒட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குறைந்தபட்ச வருமான உத்திரவாத திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் என்ற திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இரண்டு நாட்களுக்கு (25/03/2019) முன்பு பேசினார்.

Niti Ayog Vice Chairman Rajiv Kumar

Advertisment

இதற்கு பாஜகவினர் எதிர்தரப்பு கருத்துகளையும், பதிவுகளையும் முன்வைத்தனர். அரசு அமைப்பான நிதி அயோக்கின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் தன் தரப்பு கருத்துகளை முன்வைத்தார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த திட்டத்தை அவர் “வெற்றி பெற வேண்டுமென்றால், எதையும் அவர்கள் கூறுவார்கள். இது போன்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் நிச்சயமாக அது நிதி பற்றாக்குறையை தான் உண்டாக்கும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

அவர் மக்களுக்காக வேலைசெய்யும் ஒரு அரசு அதிகாரி. பாஜகவிற்கு ஆதரவு தரும் வகையில் கருத்து எதையும் பதிவிடக்கூடாது. இரண்டு நாட்களுக்குள் இதற்கு தகுந்த முறையில் விளக்கம் அறிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisment
Advertisements

வறுமையில் தவிக்கும் 25 கோடி மக்களுக்கு உதவும் வகையில் Nyunatam Aay Yojana (NYAY) என்ற திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தி பேசினார். இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக 3,60,000 கோடி ரூபாய் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும்.

இது குறித்து குமார் பேசுகையில் “காங்கிரஸ்ஸின் பழைய யுக்தி இது. 1966லேயே வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டது. அனைவருக்கும் நல்ல கல்வி அளிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதையும் பேசுவார்கள் என்று குமார் தெரிவித்தார்.

செப்டம்பர் 1, 2017 முதல் நிதி அயோக்கின் துணை தலைவராக குமார் இருந்து வருகிறார். 2008ல் ப.சிதம்பரம் 2.5%மாக இருந்த நிதி பற்றாக்குறையை 6%மாக உயர்த்தினார். இந்த அறிவிப்பால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதை அவர் உணராமல் இப்படியாக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார் ராகுல் என அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க : வறுமையை ஒழிக்க இறுதி ஆயுதம்… ஏழை குடும்பங்களுக்கு ரூ.72 ஆயிரம் நிதி உதவி – ராகுல் காந்தி

Bjp

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: