Nitin Gadkari Family Sentiment : மத்திய அமைச்சர் மற்றும் பாஜகவின் மூத்த உறுப்பினருமான நிதின் கட்கரி நாக்பூரில் நடைபெற்ற ஏ.பி.வி.பி. கூட்டத்தில் கலந்து கொண்டார். அகில பாரதிய வித்யார்தி பரிஷாத் அமைப்பில் இருந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முதலில் குடும்பத்தை கவனியுங்கள்
அப்போது “குடும்ப அமைப்பைப் பற்றி பாஜக தலைவர் பேசினார். தன்னுடைய குடும்பம், குழந்தைகள என அனைவரையும் விட்டுவிட்டு பாஜகவிற்கே தன்னை அர்பணிக்க விரும்புகின்றேன் என்று கூறும் நிறைய தொண்டர்களை நான் காண்கின்றேன். நான் அவர்களிடம் ”உங்கள் குடும்பம் என்ன செய்கிறது?” என்று கேட்டேன்.
ஒருவர் ”என்னுடைய கடை நன்றாக ஓடாததால் அதை மூடிவிட்டேன். எனக்கு மனைவியும் குழந்தைகளும் உள்ளனர்” என்றார்.
நான் கூறினேன் “முதலில் உங்களின் குடும்பத்தினரை கவனியுங்கள். ஒருவரால் தன்னுடைய குடும்பத்தை உருப்படியாக கவனிக்க இயலவில்லை என்றால், அவரால் ஒரு நாட்டினை கவனிக்க இயலாது” என்று கூறினேன். முதலில் உங்களின் குடும்பத்தினரை பாருங்கள். பின்பு கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் உழையுங்கள்” என்று கூறினேன்.
கடந்த வாரம் கனவுகளை நிறைவேற்றாத அரசியல் தலைவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : கனவுகளை நிறைவேற்றாத அரசியல் தலைவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள் : நிதின் கட்கரி பேச்சு