dayanidhi-maran | nitin-gadkari | chennai | bengaluru | சென்னை-பெங்களூரு இடையேயான கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலை இந்த ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நிதின் கட்கரி, அந்தந்த மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு மொத்தமாக கட்டுமானப் பொருட்களைக் கிடைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உதவுமாறு தமிழ்நாடு மற்றும் கேரள அரசாங்கங்களை வலியுறுத்தினார்.
தொடர்ந்து, "டிசம்பர் மாதத்திற்குள் கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை பணிகளை முடிக்க எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறோம். சென்னைக்கும் பெங்களூருவுக்கும் இடையே உள்ள தூரத்தை இரண்டு மணி நேரத்தில் கடக்க முடியும்" என்று அமைச்சர் கூறினார்.
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் பேசி, மாநிலத்தில் நெடுஞ்சாலைகள் அமைப்பதில் என்ஹெச்ஏஐ எதிர்கொள்ளும் பிரச்னைகளை அவரிடம் தெரிவித்ததாக கட்காரி கூறினார்.
தொடர்ந்து, இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால், சாலை அமைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் பெறாமல், சாலையை எப்படி முடிக்க முடியும் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு கட்காரி பதிலளித்தார்.
இதையடுத்து, கேரளாவின் கொல்லத்தை தமிழகத்தின் மதுரையுடன் இணைக்கும் NH-774 கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலையில், திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் செலவில் 50 சதவீதத்திற்கு பதிலாக 25 சதவீதத்தை ஏற்கும் மத்திய அரசின் திட்டத்தை கேரள அரசு ஏற்றுக்கொண்டதாக கட்கரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“