Ramnath Goenka Excellence In Journalism Awards 2024 | Union Minister Nitin Gadkari: 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் ராம்நாத் கோயங்கா நினைவாக ராம்நாத் கோயங்கா சிறந்த பத்திரிகைளர் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருது பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்கும் பத்திரிகையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 17-வது ராம்நாத் கோயங்கா சிறந்த பத்திரிகைளர் விருதுகள் (ஆர்.என்.ஜி விருதுகள்) விழா நேற்று செவ்வாய்க்கிழமை புது டெல்லியில் நடந்தது. மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 17th Ramnath Goenka Awards for Excellence in Journalism | On way to being economic power, our ideals, convictions also key in a democracy: Gadkari
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான ராம்நாத் கோயங்கா விருதுகளை வழங்கி பேசிய அவர், இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையை வலுப்படுத்துகிறது என்றும், பொருளாதார முன்னேற்றத்தைத் தவிர, ஜனநாயகத்தில் வாழ்வதற்கு நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள் சமமாக முக்கியம் அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“நாம் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கு முயற்சி செய்கிறோம். பொருளாதார முன்னேற்றம் முக்கியம் ஆனால் அதுவே வாழ்க்கையின் இறுதி முடிவாக இருக்க முடியாது. 1947 முதல் தங்கள் நம்பிக்கையுடனும் இலட்சியத்துடனும் ஜனநாயகத்திற்காக உழைத்தவர்களை, சுதந்திர இந்தியாவின் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது அவர்களை நினைவு கூர்வோம்.
மக்கள் யார் என்ன சொன்னார்கள் என்பதில் ஆர்வம் காட்டாமல், அறிவைப் பெறுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும் அவர் கூறினார். "இந்த வேகமாக மாறிவரும் உலகில் தகவல் கொடுப்பது மட்டுமே இறுதி இலக்கு அல்ல. விளையாட்டு, கலாச்சாரம், அறிவு, விவசாயம் மற்றும் தொழில் துறைகளில் இந்தியா உலகத்தரம் வாய்ந்ததாக இருக்க முயற்சிக்கிறது. வேகமாக மாறிவரும் இந்த உலகில், ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மக்கள் யார் என்ன சொன்னார்கள் என்பதில் ஆர்வம் காட்டுவதில்லை, ஆனால் அறிவில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஜூன் 25, 1975 அன்று, எமர்ஜென்சி விதிக்கப்பட்டபோது, என் குடும்பத்தைச் சேர்ந்த பலர் மிசா-வின் கீழ் கைது செய்யப்பட்டனர். அந்த இரண்டு வருடங்கள் மிகவும் வேதனையான காலக் கட்டம். அப்போதுதான் எமர்ஜென்சிக்கு எதிராக செயல்படுவேன் என்று முடிவு செய்தேன். அப்போது செய்தித்தாள்கள் தணிக்கை செய்யப்பட்டன. மேலும் ராம்நாத் கோயங்கா-வும் எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டத்திற்கு விலை கொடுக்க வேண்டியிருந்தது. எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டத்தில் கோயங்கா நம் அனைவருக்கும் ஒரு அடையாள உத்வேகமாக மாறினார்.
நம் அனைவருக்கும், நெறிமுறைகள் மற்றும் வசதி என்பது நமது ஆளுமையைக் குழப்பும் ஒரு பிரச்சினை, அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி, அரசியல் அல்லது பத்திரிகையாக இருந்தாலும் சரி. ஆனால் கோயங்கா தனது கொள்கைகளுக்காக விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் ஜனநாயகத்தில் தங்கியிருந்தார். எமர்ஜென்சியின் போது நான் பாதிப்புக்குள்ளானதால் தான் அரசியலுக்கு வந்தேன்.
நதி ஒரு திசையில் பாயும் போது, இறந்த மீன் மற்றும் கழிவுகள் அனைத்தும் அதனுடன் பாய்கின்றன. ஆனால் உயிருடன் இருக்கும் மீன் அலைக்கு எதிராக எதிர்நீச்சல் போட முயற்சிக்கிறது. ராம்நாத் கோயங்கா-வும் அதுபோலத்தான்
பொருளாதார முன்னேற்றத்திற்கு அப்பால், ஜனநாயகத்தில் வாழ்வதற்கு நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகளும் முக்கியம். நாம் நவீனமயமாக்கல் காலக்கட்டத்தில் இருக்கிறோம். ஆனால் நவீனமயமாக்கலுக்கும் மேற்கத்தியமயமாக்கலுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது." என்று நிதின் கட்கரி கூறினார்.
17வது ராம்நாத் கோயங்கா விருதுகள் அச்சு, ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் இருந்து 44 பேர் விருதுகளை வென்றனர். ராம்நாத் கோயங்கா நினைவு அறக்கட்டளையால் நிறுவப்பட்ட இந்த விருதுகள், புலனாய்வு இதழியல், விளையாட்டு, அரசியல் மற்றும் அரசு, புத்தகங்கள், சிறப்பு எழுத்து மற்றும் பிராந்திய மொழிகள் உட்பட 13 பிரிவுகளில் அச்சு, டிஜிட்டல் மற்றும் ஒளிபரப்பு பத்திரிக்கையாளர்களின் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தும் சிறந்த பத்திரிக்கையாளர்களை அங்கீகரித்து கவுரவித்தது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் செயல் இயக்குநர் ஆனந்த் கோயங்கா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் கட்சி எல்லைகளை தாண்டிய அரசியல் தலைவர்கள் - டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி கே சக்சேனா, பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், ஜேடியு தலைவர் கே சி தியாகி, டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான சவுரப் பரத்வாஜ், பாஜக எம்பி மனோஜ் திவாரி, எம்பி டேனிஷ் அலி இராஜதந்திரிகள் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்தியா டுடே குழுமத்தின் அரூன் பூரி மற்றும் கல்லி பூரி, முன்னாள் AMU V-C மற்றும் பா.ஜ.க எம்.எல்.சி தாரிக் மன்சூர், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் அகமது ஜைதி, இந்தியாவின் கூகுள் நியூஸ் பார்ட்னர்ஷிப்ஸ் தலைவர் துர்கா ரகுநாத், நியூஸ்லாண்ட்ரி நிறுவனரும் பத்திரிகையாளருமான மது ட்ரெஹான், பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா சி.இ.ஓ விஜய் ஜோஷி, ஜெர்மன் தூதரக செய்தித் தொடர்பாளர் செபாஸ்டியன் ஃபுச்ஸ், இஸ்ரேல் தூதரக செய்தித் தொடர்பாளர் கை நிர், அமெரிக்க தூதரக ஊடக ஆலோசகர் ராஜா பட்டாச்சார்யா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தூதர்களும் பங்கேற்றனர்.
விருதுகளின் நடுவர் குழுவில் நீதிபதி பி என் ஸ்ரீகிருஷ்ணா, இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி மற்றும் முன்னாள் நீதிபதி; பேராசிரியர் (டாக்டர்) சி ராஜ் குமார், ஸ்தாபக டீன், ஜிண்டால் குளோபல் லா ஸ்கூல் (JGLS) மற்றும் இயக்குனர், உயர்கல்வி ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனம் (IIHEd); டாக்டர் எஸ் ஒய் குரைஷி, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்; மற்றும் கே ஜி சுரேஷ், மகன்லால் சதுர்வேதி தேசிய இதழியல் மற்றும் தொடர்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், போபால் ஆகியோர் இடம் பெற்றனர்.
முன்னதாக, ராம்நாத் கோயங்கா சிறந்த பத்திரிகையாளர் விருது விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரதீபா பாட்டீல், ஏ.பி.ஜே அப்துல் கலாம், ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.