லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பீகார் மாநில கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜே.டி.யு) மத்திய அரசின் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" முழக்கத்துக்கு இணங்க, மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று திங்கள்கிழமை கோரியது.
ஆங்கிலத்தில் படிக்க: As Nitish Kumar lands in Delhi ahead of result day, JD(U) demands early state polls
இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடியுடன் பீகார் முதல்வரும் கட்சித் தலைவருமான நிதிஷ் குமாரின் திங்கள்கிழமை சந்திப்பை ஜே.டி.யு. கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யுமான கே.சி. தியாகி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசினார். அவர் கூறியதாவது: “முதல்வர் நிதிஷ் குமார் பிரதமரை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்பதை தெளிவுபடுத்துகிறோம். முதல்வர் தனது வழக்கமான கண் பரிசோதனைக்காக டெல்லி வந்துள்ளார். மேலும், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நேரம் கேட்டுள்ளார்.” என்று கூறினார்.
மாநிலத்தில் நிதிஷின் அரசியல் பங்கை அதிகரிக்கும் முயற்சியில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் இல்லம் மற்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. “நாம் நல்ல எண்ணிக்கையில் மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றால் தேசிய அரசியலில் முக்கியப் பங்காற்ற முடியும். தற்போது சட்டசபையில் 45 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டால், இந்த எண்ணிக்கை கணிசமாக உயரும்” என்று ஒரு ஜே.டி.யு தலைவர் கூறினார். மேலும், மூத்த கூட்டணி கட்சியாக இல்லாவிட்டால், என்.டி.ஏ உடன் சமமானவர்களின் கூட்டணியை கட்சி எதிர்பார்த்து வருவதாகவும் கூறினார்.
ஜே.டி.(யு) எப்போதுமே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவாக இருப்பதாக தியாகி கூறினார். “என்.டி.ஏ மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரிகிறது, பீகாரில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். நிதிஷ் இந்த யோசனையை எப்போதும் ஆதரித்து வருகிறார். ஏனெனில், இது நிறைய பணத்தை மிச்சப்படுத்தும்” என்று அவர் கூறினார்.
ஜே.டி.யூ தலைவர் தியாகி நேரம் பார்த்து கட்சி இந்த கோரிக்கை வைக்கிறது என்பதை நிராகரித்தார். “அதற்கும் நேரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் (ஒரே நாடு, ஒரே தேர்தல்) தலைமையிலான குழுவிடம் கூட நாங்கள் இந்த யோசனைக்கு ஆதரவாக உள்ளோம் என்று கூறியிருந்தோம். பதிவாகி உள்ளது” என்று கூறினார்.
ஜே.டி.யு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “ஒரே நாடு, ஒரே தேர்தல்” யோசனையை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. ஏனென்றால், மத்தியில் ஆளும் கூட்டணி அதன் முக்கிய திட்டங்களை செயல்படுத்தும், இதனால் உள்ளூர் பிரச்சினைகளை மழுங்கடிக்கும், இல்லையெனில் அவை சட்டமன்றத் தேர்தலின் போது அரசியல் விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தும்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“