Advertisment

‘ஒற்றுமையைக் காட்டும் கூட்டணி’: ஜன. 30-ம் தேதி ராகுலின் நியாய யாத்திரையில் பங்கேற்கும் நிதிஷ், தேஜஸ்வி

மக்களவைத் தேர்தலுக்காக, பீகாரில் தொகுதிப் பங்கீட்டில் ஒருமித்த கருத்து இல்லாததால், காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.(யு)) இடையே கூட்டணி ஆர்வம் குறைவு ஏற்பட்டுள்ளதாக ஊகங்கள் எழுந்துள்ளன.

author-image
WebDesk
New Update
nitish

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ். (பி.டி.ஐ புகைப்படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் இடையே நட்புறவு ஏற்பட்டுள்ளதன் அடையாளமாக, பீகார் முதல்வரும், ஜே.டி. (யு) தேசியத் தலைவருமான நிதிஷ் குமார், ஜனவரி 30-ம் தேதி பூர்ணியாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நியாய யாத்திரையில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் யாதவும் பூர்ணியா பேரணியில் கலந்து கொள்கிறார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘Putting up a united front’: Nitish, Tejashwi to attend Rahul’s Nyay Yatra on Jan 30

இதை காங்கிரஸ் எம்.எல்.சி-யும், அக்கட்சியின் மூத்த தலைவருமான பிரேம் சந்திர மிஸ்ரா திங்கள்கிழமை உறுதி செய்தார்.  “ராகுல் காந்தி ஜனவரி 29-ம் தேதி மேற்கு பெகாலில் இருந்து கிஷன்கஞ்ச் வழியாக பீகாருக்குள் நுழைவார், ஜனவரி 30-ம் தேதி பூர்ணியாவில் நடைபெறும் பேரணியில் பங்கேற்பார். பூர்ணியா பேரணியில் பங்கேற்பதை முதல்வர் நிதிஷ் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்” என்று மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறினார். ராகுல் காந்தி பிப்ரவரி 1-ம் தேதி மேற்கு வங்கத்தில் மீண்டும் நுழைவதற்கு முன் அராரியா மற்றும் கதிஹாருக்கு பயணம் செய்வார் என்று மிஸ்ரா கூறினார்.

கிஷன்கஞ்ச் மக்களவைத் தொகுதி தற்போது காங்கிரஸ் வசம் உள்ளது. 2019 பொதுத் தேர்தலில் மகாகட்பந்தன் வெற்றி பெற்ற ஒரே தொகுதி இது. கிஷன்கஞ்ச், அராரியா, பூர்ணியா மற்றும் கதிஹார் ஆகிய மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய சீமாஞ்சல் பகுதியில் காங்கிரஸ் கவனம் செலுத்தியுள்ளது. தற்போது, ஐக்கிய ஜனதா தளம் கட்சி பூர்ணியா மற்றும் கதிஹார் தொகுதிகளையும், பா.ஜ.க அராரியா தொகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இந்த யாத்திரைக்கான ஊடகக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மிஸ்ரா,  “ராகுல் காந்தியின் யாத்திரை 2 கட்டங்களாக 425 கி.மீ தொலைவு, பீகாரின் ஏழு மாவட்டங்கள் வழியாகச் செல்லும் என்று கூறினார். இந்த யாத்திரை தெற்கு பீகார் மாவட்டங்களான ஔரங்காபாத், கைமூர் மற்றும் ரோஹ்தாஸ் ஆகியவற்றை உள்ளடக்கும்” என்று அவர் கூறினார்.

மக்களவைத் தேர்தலுக்காக பீகாரில் தொகுதிப் பங்கீட்டில் ஒருமித்த கருத்து இல்லாததால், காங்கிரஸ் மற்றும் ஜே.டி.(யு) இடையே கூட்டணி ஆர்வக் குறைவு ஏற்பட்டுள்ளதாக ஊகங்கள் எழுந்துள்ளன. இந்த பேரணியில் கலந்து கொள்ள நிதிஷ் சம்மதம் தெரிவித்தது, இந்தியா கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமையைக் காட்டுவதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஜே.டி. (யு) தலைவர் ஒருவர் கூறினார்:  “நாங்கள் காங்கிரஸின் யாத்திரையை ஒருபோதும் வெறுக்கவில்லை, ஆனால் அதை ஒரு இந்தியா கூட்டணி அணிவகுப்பாக மாற்ற விரும்பினோம். தற்போது பூர்ணியாவில் நடைபெறும் கூட்டத்தில் ராகுல் காந்தி பேச முடிவு செய்துள்ள நிலையில், அதில் நிதிஷ் குமார் கலந்து கொள்கிறார். இது ஒற்றுமைக்கான சிறந்த அடையாளமாக இருக்கும்.” என்று கூறினார்.

இதுகுறித்து ஆர்.ஜே.டி தலைவர் ஒருவர் கூறியதாவது: துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் பூர்ணியா பேரணியில் கலந்து கொள்கிறார். நாங்கள் அனைவரும் இந்தியா கூட்டணிக்காக ஒரு ஒருங்கிணைந்த நிகழ்ச்சியை நடத்த முயற்சிக்கிறோம்.” என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர் மிஸ்ரா கூறுகையில், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,  “இ.டி சம்மன்கள் இருப்பதால், அவர் ஜனவரி 31-ம் தேதி பூர்ணியாவில் நடைபெறும் பேரணியில் அல்லது கதிஹாரில் பங்கேற்கலாம்” என்று கூறினார்.

லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி ஆகியோரை முறையே ஜனவரி 29 மற்றும் 30 தேதிகளில் பாட்னாவில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் கூறியுள்ளது.

சி.பி.ஐ (எம்.எல்) லிபரேஷன் பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யாவைத் தவிர, சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ (எம்)-ன் மாநிலத் தலைவர்கள் போன்ற மற்ற கூட்டணி கட்சிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாத்திரைக்கு தங்கள் ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர் என்று மிஸ்ரா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment