பட்டாசு வெடிக்க தடையில்லை என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை பிற்பித்துள்ளது. அதே சமயம் பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீதிமன்றம் புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது.
பட்டாசு விற்பனை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:
பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது, காற்று மாசும், சுவாசக் கோளாறும் ஏற்படுகிறது, இதனால் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, பாதுகாத்து வைத்தலுக்குத் தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால், கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கு எதிராகப் பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் மனுதாரர், பட்டாசு தயாரிப்பாளர்கள், மத்திய அரசு மற்றும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
Read More: தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு: ‘குட்டி ஜப்பான்’ சிவகாசி கதி என்ன?
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (23.10.18) வெளியாகியது. அப்போது நீதிபதிகள், நாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்க முடியாது தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
அதேசமயம், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள்:
1. தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.
2. குறைந்த அளவிலான புகை, சத்தம் வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
3. ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி கிடையாது.
4. பகல் நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.
5. அதிக அளவுக்கு அலுமினியம் உள்ள பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது .
6. ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி கிடையாது