"எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க," 2024 லோக்சபா தேர்தல் முடியும் வரை இந்திய தேசிய காங்கிரஸிடம் இருந்து 3,500 கோடி ரூபாயை வசூலிக்க வருமான வரித்துறை எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்காது, என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா திங்களன்று உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: No coercive steps will be taken to recover Rs 3,500 crore from Congress till Lok Sabha polls over: I-T dept to Supreme Court
இந்த வழக்கு ஜூலை 24, 2024 அன்று அடுத்த விசாரணைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலின் முதல் கட்டம் 2024 தொடங்குவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், ஐந்தாண்டுகளுக்கு (1994-95 மற்றும் 2017- 2018 முதல் 2020-21 வரை) ரூ.1,823 கோடி செலுத்துமாறு வருமான வரித்துறையிடம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டது. மேலும், சனிக்கிழமை, 2014-15 முதல் 2016-17 வரையிலான மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு ரூ.1,745 கோடி செலுத்த வருமான வரித்துறையிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் வந்தது.
2019 லோக்சபா தேர்தலுக்கு முந்தைய வருமான வரித் துறையின் சோதனைகளைத் தொடர்ந்து, 523.87 கோடி ரூபாய் "கணக்கில் இல்லாத பரிவர்த்தனைகள்" கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறி, காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்கள் சரமாரியாக வந்துள்ளன.
இந்த நோட்டீசுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அதை "நிதி ரீதியாக முடக்க" "வரி பயங்கரவாதத்தில்" ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“