நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததால் ஆந்திர மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளாகவும்,தங்களை சுட்டிக்காட்டி பேசிய பிரதமரின் உரை தங்களை மேலும் காயப்படுத்தியுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
நேற்று அரசியல் உலகில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஆளும் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வந்தன. இந்த தீா்மானம் மீது மக்களவையில் நேற்று (20.7.18) வாக்கெடுப்பு நடைபெற்றது.
வாக்கெடுப்புக்கு முன்னதாக நேற்று காலை முதலே தீா்மானம் மீது விவாதம் நடைபெற்றது. காலை முதல் எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரவு 9 மணிக்கு மேலாக பதில் அளிக்கத் தொடங்கினார். சுமார் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக பேசிய மோடி, 4 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு செய்த சாதனைகள் குறித்தும், எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக நடந்து கொண்ட விதம் குறித்தும் விளக்கினர்.
அதன் பின்பு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது. அதன் பின்பு ஆந்திர மாநிலம் அமராவதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ”மாநில கட்சி ஒன்று கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பிற கட்சிகள் ஆதரவளித்தது இந்திய வரலாற்றில் இதுவே முதன்முறை” என்று கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/1-50.jpg)
தொடர்ந்து பேசியவர் அவர், “ ஆந்திராவுக்கு நீதி வழங்காமல், தெலுங்கு தேசம் கட்சி நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் பதவி வகிக்கும் ஒருவர் இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் பேசுவது வருத்தமளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
இன்று டெல்லி செல்லவிருப்பதாக தெரிவித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு என்ன வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தேசத்துக்கு விளக்குவேன் என்றும் தெரிவித்தார்.