மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த பி.ஆர்.அம்பேத்கர் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று (ஆக.22) நடைபெற்றது. இதில் சிறப்புரை ஆற்றிய ஜேஎன்யு துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட், இந்து கடவுள்கள் மானுடவியல் ரீதியாக உயர் சாதியில் இருந்து வரவில்லை என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “அறிவியல் ரீதியாக நமது கடவுள்களின் தொடக்கத்தை பாருங்கள். எந்த கடவுளும் பிராமணர் அல்ல. உயர்ந்தவர் க்ஷத்ரியர். சிவபெருமான் பட்டியலின அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டும்.
அவர் ஒரு பாம்புடன் கல்லறையில் அமர்ந்திருக்கிறார். அவர் குறைந்த ஆடையையே உடுத்தி இருக்கிறார். பிராமணர்கள் அவ்வாறு கல்லறையில் உட்கார மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எனவே மானுடவியல் ரீதியாக கடவுள்கள் மேல் சாதியிலிருந்து வரவில்லை. லக்ஷ்மி, சக்தி உள்பட எனத் தெரிவித்தார். ஜெகநாத்தை எடுத்துக் கொண்டால், அவரும் பழங்குடியினர். எனவே, ஏன் இந்த பாகுபாட்டை நாம் ஏன் இன்னும் தொடர்கிறோம்? மிகவும் மனிதாபிமானமற்ற செயல்” என்றார்.
” ‘மனுஸ்மிருதி’ அனைத்து பெண்களையும் ‘சூத்திரர்கள்’ என்று வகைப்படுத்தியுள்ளது. இது மிகவும் பிற்போக்குத்தனமானது என்று அவர் கூறினார்.
மனுஸ்மிருதியில் எல்லா பெண்களும் சூத்திரர்கள். எந்தப் பெண்ணும் தான் ஒரு பிராமணர் என்றோ அல்லது வேறு சமூகம் என்றோ கூற முடியாது. திருமணத்தின் மூலம் மட்டுமே கணவர் அல்லது தந்தையின் சாதியை பெற முடியும் என்று நம்புகிறேன். இது பிற்போக்குத்தனமானது.
9 வயது தலித் சிறுவன் அடித்து கொலை
ராஜஸ்தானில் 9 வயதான தலித் சிறுவன் உயர்சாதி ஆசிரியரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததைக் குறிப்பிட்டு பேசிய அவர், பிறப்பின் அடிப்படையில் சாதி இல்லை என்று பலர் கூறுகிறார்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று அது பிறப்பின் அடிப்படையில் தான் உள்ளது. சமீபத்தில் ராஜஸ்தானில் ஒரு தலித் சிறுவன் தண்ணீர் பானையைத் தொட்டதால், அவன் குடிக்ககூட இல்லை மேல் சாதியினரின் தண்ணீரை தொட்டான் என்பதற்காக அடித்துக் கொல்லப்பட்டான். புரிந்து கொள்ளுங்கள், இது மனித உரிமைகள் பற்றிய கேள்வி. சக மனிதனை எப்படி இப்படி நடத்துவது? என்றார்.
அம்பேத்கரின் சாதி ஒழிப்பு பற்றி பேசுகையில், இந்திய சமூகம் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில், சாதி ஒழிப்பு மிகவும் முக்கியமானது. பாரபட்சமான, சமமற்ற இந்த அடையாளத்தில் நாம் ஏன் உணர்ச்சிவசப்படுகிறோம். செயற்கையாக கட்டமைக்கப்பட்ட சாதி அடையாளத்தை பாதுகாக்க ஒருவரை கொல்லவும் துணிகிறோம்.
சாதி மற்றும் பாலினம் குறித்து பேசுகையில், நீங்கள் ஒரு பெண்ணாகவும், பின்தங்கிய பிரிவுகளில் இருந்து வந்தவராகவும் இருந்தால், நீங்கள் இருமடங்காக ஓரங்கட்டப்படுகிறீர்கள். முதலில், நீங்கள் ஒரு பெண்ணாக இருப்பதால் பின்னர் சாதியின் பேரில்” என்றார்.
“பௌத்தம் இந்திய நாகரிகத்தில் கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதை காட்டுகிறது. இந்திய நாகரிகம் கருத்து வேறுபாடு, பன்முகத்தன்மை மற்றும் வேறுபாட்டை ஏற்றுக்கொள்கிறது என்பதை நிரூபிப்பதால், பௌத்தம் மிகப் பெரிய மதங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். பிராமண இந்து மதம் என்பதை முதலில் எதிர்த்தவர் கௌதம புத்தர். வரலாற்றில் முதல் பகுத்தறிவுவாதியும் அவர். அதைத் தொடர்ந்து டாக்டர். பி.ஆர். அம்பேத்கரால் புத்துயிர் பெற்று உள்ளது “என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“