Advertisment

அரசு விடுமுறைப் பட்டியலில் இருந்து உழைப்பாளர்கள் தினம் நீக்கம்

பாஜகவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச தொழிலாளர் அமைப்பில் புகார் அளிக்கப்படும் என மார்க்சிஸ்ட் அறிவிப்பு

author-image
WebDesk
Nov 06, 2018 17:56 IST
மே தின விடுமுறை நீக்கம்

மே தின விடுமுறை நீக்கம்

மே தின விடுமுறை நீக்கம் : திரிபுரா மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் அரசு விடுமுறைப் பட்டியலில் இருந்து உழைப்பாளார் தினத்தினை நீக்கியுள்ளது அம்மாநில அரசு.  திரிபுரா மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதற்கு முன்பு வரை அங்கு 25 ஆண்டுகளாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தான் ஆட்சி புரிந்து வந்தது.

Advertisment

2019ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது அம்மாநில அரசு. அதில் உழைப்பாளர் தினம் நீக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அலைகளை திரிபுராவில் உருவாக்கியுள்ளது. பொதுவுடமை கட்சியில் இருப்பவர்கள் அனைவரும், அரசின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

மே தின விடுமுறை நீக்கம் - எதிர்க்கட்சிகள் கண்டனம்

மாநில அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு அனைவரும் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்திருக்கிறார்கள். “மே தினம் என்பது எந்த அரசியலையும் சாராதது. உலகம் முழுவதும் அன்றைய நாள் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. மாநில அரசின் இந்தச் செயல் உழைக்கும் மக்களை அவமதிப்பதாக உள்ளது” என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி சங்கர் பிரசாத் தெரிவித்திருக்கிறார்.

பாஜக அரசின் கீழ் எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச தொழிலாளர் அமைப்பில் புகார் அளிக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருக்கிறது.

மேலும் படிக்க : நானும் ஒரு ஏழை - திரிபுரா முதல்வர்

#Tripura #Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment