Harikishan Sharma
No idol immersion in River Ganga and its tributaries : கடந்த மாதம் ஆரம்பம் தொட்டே பல்வேறு பூஜைகள் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி, தசாரா, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக 15 முக்கியமான விதிகளைக் கொண்ட அறிக்கையை கங்கை நதி ஓடும் 11 மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.
இந்த அறிக்கையை தேசிய மிஷன் ஃபார் க்ளீன் கங்கா அமைப்பு, அந்த 11 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ளது. கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் எந்த ஒரு சிலையையும் கரைக்க கூடாது என்று கடந்த மாதமே இந்த அறிக்கையை அனுப்பியுள்ளது என்.எம்.சி.ஜி. (National Mission for Clean Ganga (NMCG)).
இந்த அமைப்பு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் உத்திரகாண்ட், உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட் மற்ற்றும் மேற்குவங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். டெல்லி, இமாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
To read this article in English
இந்த அறிக்கை வெளியான பின்பு அரசு அதிகாரிகள் கங்கை கரைகள் மற்றும் படித்துறைகளில் பலத்த முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். சிலைகள் மற்றும் பூஜைப்பொருட்களை அப்புறப்படுத்த, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் புதிய மாற்று ஏற்பாடுகள் செய்யவும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
ரூ.50 ஆயிரம் அபராதம்
சுற்றுச் சூழலியல் (பாதுகாப்பு) சட்டம் 1986 பிரிவு 5ன் படி, கங்கை மற்றும் அதன் கிளை நதிகளின் கரையோரங்கள் மற்றும் படித்துறைகளில் இருந்து நதிகளில் சிலை மற்றும் பூஜைப் பொருட்களை கரைப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முனிசிபல் ஏரியா எல்லைக்கு உட்பட்டு, பாதிப்பில்லாத வகையில் சிலைகளை அப்புறப்படுத்த முறையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து மாநில அரசுகளும், நிர்வாகிகளும், மாநகராட்சிகளும், அப்பகுதியில் எங்கும் சிலைகள் செயற்கை களிமண், மக்காத பொருட்கள், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பேக்ட் க்ளே, ரெசின் பைபர்கள் கொண்டு உருவாக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் நச்சு தன்மை மிக்க, வேதிப்பொருட்கள் அதிகம் உள்ள டைகள் மற்றும் பெய்ண்ட்கள் ஆகியவை இதில் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் அவர்கள் உறுதி செய்யவேண்டும்.
ஒவ்வொரு விழாவும் முடிவடைந்த 7 நாட்களுக்குள், சிலை கரைப்பு தொடர்பான அறிக்கைகளையும் அதை தடுக்க மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் உடனே அறிவிக்க வேண்டும் என்று என்.எம்.சி.ஜி. அறிவித்துள்ளது. கூறப்பட்டிருக்கும் 15 விதிகளையும் மீறி யாரேனும் சிலைகளை கரைத்திருந்தால் அவர்கள் 50 ஆயிரம் ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும். 2014ம் ஆண்டு கங்கை நதி மாசடைவதை தடுக்க நமாமி கங்கே என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. 2017ம் ஆண்டு பசுமை தீர்ப்பாயம் கங்கையில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து உத்தரவிட்டது.