எந்தவொரு பெண்ணையும் அவர் சம்மதமின்றி தொட முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்!

எந்த பெண்ணையும், அவளது அனுமதி இல்லாமல் வேறு யாரும் தொடக் கூடாது என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

எந்த பெண்ணையும், அவளது அனுமதி இல்லாமல் வேறு யாரும் தொடக் கூடாது என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எந்தவொரு பெண்ணையும் அவர் சம்மதமின்றி தொட முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்!

எந்த பெண்ணையும், அவளது அனுமதி இல்லாமல் வேறு யாரும் தொட முடியாது என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கடந்த செப்டம்பர் 25, 2014ம் ஆண்டு, டெல்லி முகர்ஜி நகரில் உள்ள சந்தைக்கு 9 வயதான சிறுமி, தனது தாயுடன் சென்றிருக்கிறார். அப்போது, ராம் என்பவர் அந்த சிறுமியின் உடலை தொட்டு, பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருக்கிறார்.

இதை உடனே தன் தாயிடம் சிறுமி தெரிவிக்க, தப்பித்து ஓட முயன்ற ராமை அருகில் இருந்தவர்கள் மடக்கி பிடித்தனர்.

இது தொடர்பான வழக்கு, டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், ராம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தது. அதில், ரூ.5000 பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisment
Advertisements

தொடர்ந்து தனது தீர்ப்பை வாசித்த நீதிமன்றம், "பெண்களின் உடல் அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. வேறு யாருக்கும் அந்த உடம்பை தொட உரிமை இல்லை. அது எந்த காரணத்திற்காக இருந்தாலும் சரி. ராம் ஒரு செக்ஸ் வக்கிர புத்தியுடையவர். இவரைப் போன்ற வக்கிரக்காரர்கள் பெண்களை பலவந்தப்படுத்தி தங்கள் இச்சைகளை தீர்த்துக் கொள்ள விரும்புகின்றனர்.

உலகில் மிகவும் வேகமாக முன்னேறி வரும் நாடான இந்தியாவில், இன்னமும் குழந்தைகள் முதல் அடல்ட் பெண்கள் என அனைவரும் பொது இடங்கள், மார்க்கெட்டுகள், பேருந்துகள், இரயில்கள், தியேட்டர்கள் என கூட்டம் கூடும் இடங்களில் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்டே வருகின்றனர்" என வருத்தம் தெரிவித்துள்ளது.

New Delhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: