சீட் தர மறுத்த பயணிகள்: பேருந்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி - கேரளாவில் பரிதாப சம்பவம்

கேரள மாநிலம் கோட்டயத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு பேருந்தில் யாரும் இடம் தர முன்வராததால், அப்பேருந்து வளைவில் திரும்பும்போது அவர் கீழே விழுந்து இறந்தார்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு பேருந்தில் யாரும் இடம் தர முன்வராததால், அப்பேருந்து வளைவில் திரும்பும்போது அவர் கீழே விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்தவர் நஷீதா (வயது 34). இவர் கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி தன் குடும்பத்தினருடன் தனியார் பேருந்து ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு சக பயணியகள் யாரும் இருக்கை தர முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், பேருந்து வளைவு ஒன்றில் திரும்பும்போது நின்றிருந்த நஷீதா, பேருந்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கிறார். இதனால், படுகாயமடைந்த நஷீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த நஷீதா கடந்த புதன் கிழமை உயிரிழந்தார்.

உயிரிழந்த நஷீதாவுக்கு ஏற்கனவே 10 மற்றும் 4 வயதுகளில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். பேருந்தில் தன் மனைவிக்கு சக பயணிகள் அமர இருக்கை தந்திருந்தால், தன் மனைவி இப்போது உயிருடன் இருந்திருப்பார் என அவரது கணவர் தாஹா வேதனை தெரிவிக்கிறார்.

பேருந்து ஓட்டுநர் மீது வேகமாக வாகனத்தை இயக்குதல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நஷீதாவின் மரணத்திற்கு அந்த பேருந்தில் இருக்கை தராத அனைத்து சக பயணிகளும் தானே.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close