குடியுரிமை திருத்த சட்டம் : எச்சரிக்கை செய்யும் வெளிநாட்டு தலைவர்கள்!

சர்வதேச விமர்சனங்களுக்கு மத்திய அரசு செவிமெடுக்கிறதா என்ற கேள்வி நிலவி வருகிறது.

By: Updated: December 30, 2019, 07:51:38 PM

No outreach on CAA, foreign diplomats warn : குடியுரிமை திருத்த சட்டத்தினை அமலாக்கத் துவங்கிய நாளில் இருந்து நாடு முழுவதும் பயங்கர எதிர்ப்பலைகள் உருவானது. வெளிநாடு தலைவர்கள் அனைவரும் இது “உள்நாட்டு விவகாரம்” என்ற நிலைப்பாட்டினை கொண்டிருந்தார்கள். இருப்பினும் கடந்த சில நாட்களாக ஆசியாவில் இருக்கும் 16 நாடுகளில் இருக்கும் வெளிநாட்டு தூதுவர்கள், மற்றும் அரசியல் வல்லுநர்களிடம் பேசினோம். அவர்கள் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த முடிவு குறித்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். புல்வாமா தாக்குதல், பாலக்கோட் வான்வழி தாக்குதல், அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ நீக்கம் செய்தது, அயோத்தி வழக்கின் தீர்ப்பு அனைத்தையும் இந்தியா உள்நாட்டு விவகாரம் என்று, இது குறித்து கருத்து தெரிவிக்கும் தலைவர்களுக்கு கூறியது. ஆனால் சி.ஏ.ஏ குறித்து இதுவரை அவ்வாறு ஒன்றும் தெளிவுபடுத்தவில்லை.

2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

காஷ்மீர் மற்றும் அயோத்தி தீர்ப்பினை இந்திய அரசு உள்நாட்டு விவகாரம் என்று எங்களிடம் விளக்கம் அளித்தது. ஆனால் சி.ஏ.ஏ குறித்து எந்த விதமான விளக்கத்தையும் இந்தியா அளிக்கவில்லை. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து டிசம்பர் 31,2014-க்கு முன்பு வந்த சீக்கியர்கள், இந்துக்கள், புத்த மதத்தினர், ஜெய்ன்கள், ஃபார்ஸிக்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும். ஆனால் இஸ்லாமியர்களுக்கு இல்லை சி.ஏ.ஏ. சட்டம் வரையறை செய்கிறது. இது இந்தியாவின் 3 அண்டை நாடுகளை உள்ளடக்கியதும் கூட. என்று ஜி20 மாநாட்டின் தூதுவர் அறிவித்துள்ளார். ஜி-20, பி-5 மாநாட்டில் இருக்கும் நாடுகளின் தலைவர்கள், தூதுவர்கள் இது குறித்து கூறும் போது, ”சி.ஏ.ஏ மிகவும் சென்ஸிட்டிவானது. நிச்சயமாக இது இந்தியாவுடனான இருநாட்டு உறவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

2019ம் ஆண்டு முழுவதும் பல்வேறு தருணங்களில் வெளியுறவுத்துறை அமைச்சகம், புல்வாமா தாக்குதல், காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்து ரத்து, அயோத்தி தீர்ப்பு குறித்து அடிக்கடி விளக்கங்களை அளித்து வந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற இருநாட்டு பேச்சுவார்த்தைகளின் போது, சுருக்கமாகவோ, தனித்தனியாகவோ, சி.ஏ.ஏ. குறித்து எந்தவிதமான விளக்கங்களையும் இந்திய அரசு தரவில்லை. சி.ஏ.ஏ குறித்த சிறு விளக்கங்களை, கேள்வி பதில் முறைப்படி எழுத்து வடிவில் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அரசியல் வல்லுநர்கள் பலரும், இது இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரான நிலைப்பாடு என்று மட்டும் கருதவில்லை. மாறாக மத்திய அரசு, இந்த சட்டத்தினால் ஏற்படும், சர்வதேச அதிருப்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு செவிமெடுக்கிறதா என்றும் உண்ணிப்பாக கவனித்து வருகிறார்கள். சி.ஏ.ஏ சட்டத்தை தொடர்ந்து அரசியல் சூழலில் ஏற்பட்ட மிகப்பெரிய மற்றும் முதல் மாற்றம் என்பது வங்கதேச உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் வருகை ரத்து மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்ஜோ அபேயின் இந்ந்திய வருகை ரத்து ஆகும்.

இந்திய பிரதமர் மோடி, சர்வதேச விமர்சனங்களுக்கு நிச்சயம் பதில் அளிப்பார் என்று பல்வேறு அரசியல் வல்லுநர்கள் நம்புகின்றார்கள். ஆனால் அமித் ஷா குறித்து அவர்கள் அவ்வளவு திட்டவட்டமாக இல்லை. சர்வதேச பத்திரிக்கைகள் எங்களின் தலைமையகத்தில் படிக்கப்படுகின்றனர். மோடி அரசால் எவ்வளவு தூரம் அபாயகரமான முடிவுகளை எடுக்க இயலும் என்று கேள்வி எழுப்புகின்றார்கள் என்றார் ஒரு நாட்டின் தூதுவர். சர்வதேச பத்திரிக்கைகைல் வரும் புகைப்படங்கள், கட்டுரைகள் இந்தியாவின் நட்பு நாடுகளை கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளது. பகிரப்பட்ட மதிப்புகளின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது என்றார் மற்றொருவர்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் காங்கிரஸ் தலைவர் ப்ரமிளா ஜெயபால் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததால் அவரை பார்ப்பதை நிராகரித்துவிட்டார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். சென்னையில் பிறந்து வளர்ந்த ப்ரமிளாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் எலிசபெத் வாரன் மற்றும் பீட்டர் பட்டிகீக் ஆகியோர் தங்களின் ஆதரவினை தெரிவித்துள்ளனர். இந்தியா தங்களின் மிக முக்கியமான நண்பர்களை இழக்க துவங்குகிறது என்றும் வெளிப்படையாக  தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும், மத்திய அரசின் நிலை பலவீனம் அடைந்து வருகிறது. இந்த இமேஜ் என்றும் மறையாது. போராட்டக்காரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, அவர்கள் மீது இப்போது நடத்தப்படும் தாக்குதல்கள் எல்லாம், இந்த அரசு மாற்றுக்கருத்துகளையும், விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளும் வகையில் இல்லை என்பதை வெளிப்படையாக காட்டுகிறது என்றார் ஐரோப்பா நாடு ஒன்றின் தூதுவர்.

கடந்த வாரம் ஜெர்மனி நாட்டை சேர்ந்த மாணவர் மற்றும் நார்வே பயணி ஒருவர் அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தன்மையை வெளிப்படுத்துவதாக இல்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். வங்கதேசம் மற்றும் மலேசியா மட்டுமே வெளிப்படையாக தங்களின் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளன. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு பயணிகளுக்கு அறிவுரை மட்டுமே வழங்கியுள்ளது.

அடிப்படை தீண்டாமை என்றும், சம உரிமைக்கு எதிரான நிலைப்பாடு என்றும் ஐக்கியநாடுகள் சபையின் ஹை கமிஷ்னர் அறிவித்துள்ளார். ஃப்ரான்ஸ் மற்றும் ரஷ்ய நாடுகள் இதனை உள்நாட்டு விவகாரம் என்றூ கூறியுள்ளனர். மத சிறுபான்மையினர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும். அதனை அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக முறைப்படி மேற்கொள்ள வேண்டும் என்றும் தி ஸ்டேட் டிபார்ட்மெண்ட் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:No outreach caa foreign diplomats warn

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X