Advertisment

பாஸ்போர்ட் இல்லாமல் படகில் பயணம்- இந்தியாவுக்குள் மீண்டும் நுழைய முயன்ற தமிழக இன்ஜினியர் கைது, நடந்தது என்ன?

ஈரானைச் சேர்ந்த மருத்துவர், அசோக்குமாருக்கு, முதலில் ஓமன் வளைகுடாவைக் கடந்து ஈரான் சென்று, பின்னர் இந்தியாவுக்குப் பயணம் செய்ய உதவியதாக பாண்டே கூறினார்.

author-image
WebDesk
New Update
Muscat

No passport, TN engineer working in Muscat lands on Okha coast on board dinghy, held

வேலைக்காக மஸ்கட் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மெக்கனிக்கல் இன்ஜினியர் அசோக்குமார் ஐயப்பன், வியாழன் அதிகாலை ஓகா மீன்பிடி துறைமுகத்தில் (Okha fishing harbor) மூன்று ஈரானிய பிரஜைகள் பயணித்த படகில், சரியான பயண ஆவணங்கள் இல்லாமல் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய முயன்றபோது, தேவபூமி துவாரகா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Advertisment

மஸ்கட்டில் உள்ள மற்றொரு நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக வேலை பார்க்கும் அவரது தம்பி ஆனந்த்குமாரும் கைது செய்யப்பட்டார், அவர் இந்தியாவுக்கு விமானம் மூலம் திரும்பி ஓகா நகருக்குச் சென்று கடல் வழியாக அங்கு வரவிருந்த அசோக்குமாரை அழைக்கச் சென்றபோது கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஒரு ரகசிய தகவலின் பேரில், தேவபூமி துவாரகா மாவட்ட காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு, துவாரகா காவல்துறையின் உள்ளூர் குற்றப்பிரிவு மற்றும் ஓகா மரைன் காவல் நிலையங்களின் அதிகாரிகள், ஓகா துறைமுகத்தில் கட்டுமானத்தில் உள்ள சிக்னேச்சர் பாலம் அருகே, ஒரு டிங்கி படகை தடுத்து நிறுத்தினர். அதில் பயணித்த நான்கு பேரையும் அவர்கள் கைது செய்தனர்.

இந்த நான்கு பேரில் ஒருவர் கோவை மாவட்டம் அன்னை நகரைச் சேர்ந்த அசோக்குமார் (37) என்பது தெரியவந்தது.

மற்ற மூவரும்- முஸ்தபா பலுச்சி (38), ஜாஷேம் பலுச்சி (25) மற்றும் அமீர்ஹுசைன் பலுச்சி (19) ஈரானிய நாட்டவர்கள், இவர்கள் ஜாஸ்க் நகரில் வசிப்பதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், ஆனந்தகுமாரும் ஓகாவில் கைது செய்யப்பட்டார்.

5.01 லட்சம் மதிப்புள்ள 10 கிராம் ஹெராயினை முஸ்தபா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் இருந்து ஒரு சாட்டிலைட் போன், 8 செல்போன்கள், இரண்டு லேப்டாப், பீப்பாய், பெட்ரோல் கேன்கள், ஒரு ஜிபிஎஸ் கருவி, 15 ஏடிஎம் கார்டுகள், 2.5 லட்சம் மதிப்பிலான ஈரானிய ரியால்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டன. படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேவபூமி துவாரகாவின் எஸ்.பி. நிதிஷ் பாண்டே கூறுகையில், அசோக்குமார் மஸ்கட்டில் தனது ஸ்பான்சருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, அவரது பாஸ்போர்ட் பறிக்கப்பட்டது. இதனால் அசோக் சரியான ஆவணங்கள் இல்லாமல் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய முயன்றார்.

ஈரானைச் சேர்ந்த மருத்துவர் அசோக்குமாருக்கு, முதலில் ஓமன் வளைகுடாவைக் கடந்து ஈரான் சென்று, பின்னர் இந்தியாவுக்குப் பயணம் செய்ய உதவியதாக பாண்டே கூறினார்.

ஈரானில் உள்ள டாக்டர் ஹுசைன், அவருக்கு எல்லாவற்றையும் திட்டமிட உதவினார், அதற்கு ஈடாக சுமார் 8,000 ஈரானிய ரியால்களைப் பெற்றார். முதலில், அசோக்கை மஸ்கட்டில் இருந்து கடல் வழியாக ஈரான் அடைய ஏற்பாடு செய்தார்.

பின்னர், அவர் ஒரு உள்ளூர் படகு மற்றும் மூன்று ஈரானிய பணியாளர்களை ஏற்பாடு செய்தார், அவர்கள் அவரை ஓகாவுக்கு அழைத்து வந்தனர், என்று அவர் மேலும் கூறினார்.

அதேநேரம் அசோக் குமார் தம்பி ஆனந்தகுமார், புதன்கிழமை உரிய பயண ஆவணங்களுடன் மஸ்கட்டில் இருந்து ராஜ்கோட்டிற்கு விமானத்தில் வந்தார். தனது சகோதரரை அழைக்க ஓகா சென்றார். அசோக் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைவதை எளிதாக்குவதில் ஆனந்தின் பங்கும் இருந்தது... குற்றம் சாட்டப்பட்டவர், சாட்டிலைட் தொலைபேசி மூலம் டாக்டர் ஹுசைனுடன் தொடர்பில் இருந்தார்.

நான்கு பேர் மீதும் Foreigners Act, Passport Act and Narcotic Drug and Psychotropic Substances Act ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி கூறினார்.

நான்கு பேரும் ஐந்து நாட்களுக்கு முன்பு ஈரானில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ராஜ்கோட் ரேஞ்ச்) அசோக் குமார் யாதவ் தெரிவித்தார்.

அத்தகைய படித்த ஒருவர் ஓமனில் உள்ள இந்திய தூதரகத்தை ஏன் தொடர்பு கொண்டு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கவில்லை என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

மூன்று ஈரானிய பிரஜைகளும் தங்களை மீனவர்கள் என்று கூறி வருகின்றனர். ஹெராயின் வைத்திருந்த நபர், கடல் பயத்தை (seasickness) எதிர்த்துப் போராடுவதற்காக அந்த மருந்தைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார். நாங்கள் அனைத்து கோணங்களிலும் வழக்கை விசாரித்து வருகிறோம், என்று யாதவ் மேலும் கூறினார்

Read in English: No passport, TN engineer working in Muscat lands on Okha coast on board dinghy, held

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment