/tamil-ie/media/media_files/uploads/2023/03/reservation-1.jpg)
தலித் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்று சங் பரிவாரின் மக்கள் தொடர்பு பிரிவு நடத்திய மாநாட்டில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
தலித் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. .பாலகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் அடங்கிய ஆணையத்தை மத்திய அரசு நியமித்தது.
இந்நிலையில் இந்த விவாகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக சங் பரிவார் அமைப்பின் மக்கள் தொடர்பு பிரிவு விஷ்வ சம்வத் கேந்திரா ( வி.எஸ்.கே) அமைப்பு ’கிரேட்டர் நொய்டா’ என்ற மாநாட்டை கடந்த ஞாயிற்றுகிழமை நடத்தியது.
’கிரேட்டர் நொய்டா’ மாநாடு, கெளதம புத்தா பல்கலைக்கழகம், ஹிந்து விஷவா என்ற நாளிதழும் ஒன்றிணைந்து நடத்தியது. இந்த மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது.
வி.எச்.பி அமைப்பின் தலைவர் அனில் அகர்வால் இது தொடர்பாக பேசிய போது ‘ இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவதால் தீண்டாமை நீங்கும் என்று நம்புகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையில்லை” என்று கூறினார்.
’கிறிஸ்துவ, இஸ்லாமிய மதத்தில் உள்ள ஓ.பி.சி பிரிவினர் ஏற்கனவே இட ஒதுக்கீடு பெறுகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் அவர்களின் நிலை முன்னேறி இருக்கிறது’ என்று கூறினார்.
’மிகவும் ஏழையாக இருக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை பெற முடியும். இதுபோல சிறுபான்மையினர் அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் பயனடைகின்றனர். இலவச ரேஷன் முதல் பல்வேறு சலுகைகள் பெருகின்றனர்” என்றும் அவர் கூறினார்.
விஷ்வ சம்வத் கேந்திரா மற்றும் கெளதம புத்தா பல்கலைக்கழகம் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. .பாலகிருஷ்ணன் ஆணையம் தொடர்பான 17 தலைப்புகளை தேர்வு செய்து, அதன் கீழ் ஆய்வு கட்டுரைகளை அனுப்பும்படி கூறியிருந்தது.
கிட்டதட்ட இந்த மாநாட்டில் முன்னாள் நிதிபதிகள், கல்வியாளர்கள், ஆரிசியர், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் என 150 பேர் கலந்துகொண்டனர். மேலும் இதற்கு சிறப்பு விருந்தினராக ராஜசபை எம்.பி நரேந்திர ஜாதவ் பங்கேற்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.