பிரதமர் நரேந்திர மோடியின் உரையின் போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று (ஆக.10) மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது.
பிரதமர் மோடி தனது 2 மணி நேர உரையின் போது, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு கடுமையாக பதில்களை அளித்தார்.
அப்போது, “வடகிழக்கு மாநிலத்தில் விரைவில் அமைதியை நிலைநாட்டுவோம் என சபதம் செய்தார். தொடர்ந்து, “குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்கவும், மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தவும் மத்திய- மாநில அரசுகள் இரவு பகலாக உழைத்து வருகின்றன.
மணிப்பூர் மக்களுக்கு முழு நாடும் துணை நிற்கிறது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன்” என்றார்.
பின்னர் காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துப் பேசினார். அப்போது, “வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் பிரச்னைகளுக்கு காங்கிரஸின் தவறான கொள்கைகளும் மூலக் காரணம்” என்றார்.
முன்னதாக பேசிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., எம்பி மஹுவா மொய்த்ரா, “மணிப்பூரில் நடந்தது பாரதிய ஜனதா ஆட்சியின் தோல்வியை குறிக்கிறது” எனப் பேசினார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு மணி நேர உரைக்கு பிறகு மக்களவை சபாநாயகரின் குரல் வாக்கெடுப்பைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இதையடுத்து எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“