Advertisment

ஆக.8 நம்பிக்கை இல்லா தீர்மானம்: மீண்டும் திரும்புகிறதா 2018? பி.ஜே.டி.யால் ஊக்கம் பெற்ற பாஜக!

மக்களவையில், ஆக.8ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ள நிலையில் அரசுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
No-trust motion in Lok Sabha on Aug 8 Govt gets support of BJDs 12 MPs too

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.

நாடாளுமன்ற மக்களவையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நம்பிக்கை தீர்மானம் மீது விவாதம் தொடங்குகிறது. தொடர்ந்து, ஆகஸ்ட் 10 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு பிரதமர் பணியவில்லை. இந்த நிலையில் இந்த நம்பிக்கை இல்லாத தீர்மானம் வருகிறது.

Advertisment

வடகிழக்கு பிரச்சனையின் நீண்ட வரலாற்றை எடுத்துக்காட்டும் தரவை கட்சி தயார் செய்து வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன, இதில் பெரும்பாலான பகுதிகள் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ளன.
முக்கிய மாநிலத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, மோடி அரசாங்கத்தின் இரட்டை எஞ்சின் அரசாங்க வாதத்தின் "தவறுகளை அம்பலப்படுத்த" இதனை கடைசி வாய்ப்பாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

இந்த நிலையில் ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இது அக்கட்சிக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்த நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் வெல்ல 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாரதிய ஜனதா பக்கம் தற்போது ஒய்எஸ்ஆர் (22), பிஜூ ஜனதா தளம் (12) சேர்த்து 303 எம்.பி.க்கள் உள்ளனர்.

இதற்கிடையில், “நம்பிக்கை இல்லாத தீர்மானம் தொடர்பாக விதிகள் இல்லை; தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் விவாதம் நடத்த சபாநாயகருக்கு 10 நாள்கள் அவகாசம் உள்ளது” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 20 ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கியுள்ளன.
எதிர்க்கட்சிகள் மணிப்பூர் நிலவரத்தை முதலில் சபையில் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. நம்பிக்கையில்லா தீர்மானம் பிரதமரை பேச வைப்பதற்கான ஒரு வழியாகும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

2018ஆம் ஆண்டும் இதுபோன்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத தீர்மானத்துக்கு வலியுறுத்தின. இது 2019 மக்களவை தேர்தலுக்கு களம் அமைத்து கொடுத்தது.
காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்குதலை தொடுத்தார்.
இந்த நிலையில் புனேயில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி லோக் மான்ய திலக் விருதை ஏற்றுக்கொண்டார். அப்போது, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை பற்றாக்குறையை விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Narendra Modi Odisha Parliment Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment