கோவிட் தடுப்பூசி தொடர்பான காலக்கெடுவை ஐ.சி.எம்.ஆர்-ன் ஆராய்ச்சியாளர்கள், அதிகாரிகள் அறிவித்திருந்தாலும், தடுப்பூசிகள் எதுவும் 2021 க்கு முன்னர் வெகுஜனப் பயன்பாட்டிற்குத் தயாராக இருக்க வாய்ப்பில்லை என்று பாராளுமன்ற நிலைக்குழுவிடம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்ததாக அறியப்படுகிறது
அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளைச் சார்ந்த அதிகாரிகள், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் ஆகியோர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் கோவிட் -19 தொடர்பான அரசாங்கத்தின் தயார்நிலை குறித்தும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகள் குறித்தும் விளக்கமளித்தனர்.
30 உறுப்பினர்கள் கொண்ட நிலைக்குழுவில், 6 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோன பெருந்தொற்றால் எற்பட்ட பொதுமுடக்க நிலையை கருத்தில் கொண்டு, நிலைக்குழு கூட்டத்தை மெய்நிகர் மூலம் கூட்ட அனுமதிக்க வேண்டும் என்று குழுத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கையா நாயுடுவுக்கு கடந்த மூன்று மாதங்களில் மூன்று முறை கடிதம் எழுதியிருந்தார்,
தடுப்பூசிகள் 2021ம் ஆண்டின் முற்பகுதியில் தன வெகுஜனப் பயன்பாட்டிற்குத் தயாராக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தடுப்பூசிகளை இந்திய நிறுவனங்களால் உள்நாட்டிலே உருவாக்கலாம் (அ) மேலை நாடுகளில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளை இந்திய நிறுவனங்கள் தயாரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டதாக அறியமுடிகிறது. 30,000க்கும் குறைந்த விலையில் வென்டிலேட்டர்கள் போன்ற பிற மருத்துவ சாதனங்களை உருவாக்குவதில் அரசு நிருவனங்கள கவனம் செலுத்த வேண்டும் என்றும் நிலைக்குழு தெரிவித்தது.
முன்னதாக,பாரத் பயோடெக் கோவாக்சின் (COVAXIN) மற்றும் ஜைடஸ் கேடிலாவின் ஜைகோவ்-டி (ZyCov-D) தடுப்பூசிகளுக்கான மனிதப் பரிசோதனையை நடத்துவதற்காக இப்போது இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் CDSCO (மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு) ஒப்புதல் வழங்கியது
கோவாக்சின் தடுப்பூசி மருந்துக்கான சோதனை நடைமுறைகளை விரைந்து முடித்து ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் மருந்தை, பொதுப்பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் மருத்துவ பரிசோதனைகள் முடிக்கிவிட வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் இயக்குனர் பல்ராம் பார்கவ் கடிதம் எழுதியிருந்தார் .
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil