Nobel Prize Winning Indian Origin Economist Abhijit Banerjee: பொருளாதாரத்துக்கான 2019 ஆண்டு நோபல் பரிசை இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அப்ஜித் விநாயக் பானர்ஜி, அவருடைய மனைவி எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கெல் க்ரெமர் ஆகிய மூன்று பேரும் பெற்றுள்ளனர்.
கடந்த சில நாட்களாக உலகின் மதிப்பு மிக்க விருதான நோபல் விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று 2019 ஆம் ஆண்டு பொருளாதரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்கர் ஆவார். இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறபோது இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அபிஜித் விநாயக் பானர்ஜி என்பவர் நோபல் பரிசு பெற்றுள்ளார். அவருடன் அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கில் கிரேமர் ஆகியோர் பெற்றுள்ளனர். இதன் முலம் ஒரே துறையில் ஒரே நேரத்தில் நோபல் பரிசு பெறுகின்றனர். நோபல் பரிசு மூன்று பேருக்கும் பகிந்தளிக்கப்படும் என்று நோபல் பரிசு தேர்வுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பதற்கான ஆய்வுகளுக்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழ்மையை ஒழிப்பதற்கான பொருளாதார திட்டங்களை அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட மூவரும் கண்டறிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அபிஜித் விநாயக் பானர்ஜி 1961 ஆம் ஆண்டு இந்தியாவில் மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர். இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகம், பிரெசிடென்ஸி பல்கலைக்கழகம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்ட மேற்படிப்புகளை படித்தவர்.
அபிஜித் விநாயக் பானர்ஜியும் பொருளாதார நிபுணர் எஸ்தர் ட்ஃப்லோவும் 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளனர். அபிஜித் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறார். இந்த நிலையில்தான், அபிஜித் விநாயக் பானர்ஜி மற்றும் அவரது மனைவிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.