Nobel prize laureate Abhijit Banerjee adviced government
Liz Mathew
Advertisment
Nobel prize laureate Abhijit Banerjee adviced government :அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு பெற்றதை இந்தியர்கள் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரம், இந்திய பொருளாதாரம் குறித்து மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது தான் என்றும், மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளையும் தவறென சுட்டிக் காட்டியுள்ளார்.
திங்கள் கிழமை இவர் நோபல் பரிசு பெற்ற பின்பு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து ட்வீட் செய்தார். ஏழ்மையை ஒழிக்க இவர் செய்த முயற்சிகளின் விளைவாக இவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது என்று அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.
Advertisment
Advertisements
நோபல் பரிசு வாங்குவதற்கு வெகு சில நாட்களுக்கு முன்பு தான் (அக்டோபர் 9), அமெரிக்காவின் ப்ரவுன் யுனிவர்சிட்டியில் நடைபெற்ற ஓ.பி.ஜிந்தால் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்று பேசியிருந்தார் அபிஜித் பானர்ஜி அப்போது மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து பேசினார். அப்போது மாநில அரசுகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைப்பது, அனைத்து துறைகளையும் ஏதோ ஒரு வகையில் பிரதம அலுவலகத்துடன் தொடர்பில் இருக்க வைத்திருப்பது போன்றவற்றால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து அவர் கூறியிருந்தார்.
காங்கிரஸ் தன்னுடைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆர்.டி.ஐ ஆக்ட் ஆகியவற்றை வரவேற்று பேசினார். ஆனால் இந்த ஆட்சியைப் பற்றி குறிப்பிடுகையில் “இந்த ஆட்சிக்கு அளவுக்கு மீறிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுவிட்டதாக இந்த அரசு நினைத்துக் கொள்கிறது. ஒவ்வொரு அரசு அமைப்புகளிலும் தவறுகளை சுட்டிக் காட்டும் தலைமைப் பண்புடன் ஒருவர் இருப்பார். ஆனால் அந்த ஒருவரை, அந்த துறை சாராத நபராக தேர்வு செய்து பிரதம அலுவலகமே அனுப்புகிறது. அமைப்புகள் இயங்குகின்றன. ஆனால் அவற்றின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன என்று கூறியுள்ளார்.
முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நேரத்தின் போது பிரதம அலுவலகத்தின் ஆலோசனைக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றும் கூறினார். இந்திய பொருளாதாரம் குறித்து பேசுகையில் கிராமங்களில் வாழ்ந்து வருபவர்கள் மேலும் ஏழைகளாகி வருகிறார்கள். மக்கள் வாங்கும் கடன்களின் அளவு அதிகரித்துள்ளது. ரியஸ் எஸ்டேட் முற்றிலுமாக செயலற்ற நிலையில் உள்ளது. பண மதிப்பிழக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி போன்றவற்றை தவறு என சுட்டிக் காட்டினார். மேலும் குறைந்த அளவு வருமானங்களைப் பெறும் ஏழை எளிய மக்களிடம் நிதிப்பற்றாக்குறை மிகவும் அதிகரித்து உள்ளதையும் அவர் மேற்கோள் காட்டினார்.
தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் விவசாய பொருட்களுக்கு கூடுதல் விலை தர வேண்டும் என்றும் அரசு மெத்தனம் காட்டாமல் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அவர்.