Noida policemen donated blood to pregnant woman : டெல்லி அருகே நொய்டாவில் பிரசவத்திற்கு வந்த பெண்ணுக்கு அவசரமாக ரத்தம் தேவைப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவசர உதவிக்காக உத்திரப் பிரதேசம் காவல்துறையின் அவசர உதவி எண்ணிற்கு அப்பெண்ணின் கணவர் அழைப்பு விடுத்தார்.
112 அவசர உதவிக்கு அழைத்த அவர் தன்னுடைய பெயர் விஜயகுமார், தன்னுடைய மனைவி பெயர் ரஜினி என்றும், அவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது என்றும் அறிவித்திருக்கிறார். விஜயகுமாரின் அவசரத்தை உணர்ந்த காவல்துறை, அதே ரத்த பிரிவினை கொண்ட காவல்துறையினரை அடையாளம் கண்டு அவர்களை உதவிக்கு அனுப்பியுள்ளது உ.பி. காவல்துறை.
#गौतमबुद्धनगर:- सेक्टर 24 से सूचना मिली कि मेरी पत्नी की डिलीवरी होने वाली है, डॉक्टर, ऑपरेशन के लिए ०२ यूनिट ब्लड बोल रहे हैl#PRV4668 पर तैनात अंजुल व लाला राम ने तुरंत मौके पर पहुंचकर रक्तदान किया जिसके कारण महिला का सफलतापूर्वक ऑपरेशन हुआ और एक सुदंर से बच्चे को जन्म दिया!???? pic.twitter.com/zXnW8jgL8H
அனுஜ்குமார் தியாகி மற்றும் லாலா ராம் என்ற இரண்டு காவலர்களுக்கு அதே வகை ரத்தம் இருப்பதால் தானாக முன் வந்து இரத்த தானம் அளித்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் ரத்த தானம் செய்பவர்களை தேடி கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது என்பதால் காவல்துறையே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு காவலர்களின் செயலுக்கு பொதுமக்களும் காவலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”