‘Non-partisan in economic thinking’: Nobel winner Abhijit Banerjee on Piyush Goyal’s ‘Left-leaning’ remark - 'பொருளாதாரத்தில் நான் பாகுபாடற்றவன்' - பியூஷ் கோயல் கருத்துக்கு நோபல் வின்னர் அபிஜித் பானர்ஜி பதிலடி
மேற்கு வங்கத்தில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் பணியாற்றி வருபவர் அபிஜித் பானர்ஜி, இவருடைய மனைவியும் பொருளாதார ஆய்வாளருமான எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரீமர் என்ற பொருளாதார நிபுணர் ஆகியோருடன் இணைந்து 2019ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
Advertisment
அபிஜித் பானர்ஜி சமீபத்தில், "தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி பார்த்தால் நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு எந்தவிதத்திலும் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது என்றும் இந்திய பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ”அபிஜித் பானர்ஜி அறிக்கை குற்ற உணர்வை ஏற்படுத்தவில்லையா?” என்று மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பியூஷ் கோயல், “நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியை நான் வாழ்த்துகிறேன். அவரது சிந்தனை முற்றிலும் இடது சார்பு கொண்டுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அபிஜித் பானர்ஜி முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘நியாய்’ என்ற வறுமை ஒழிப்புத் திட்டத்தை ஆதரித்தவர். ஆகையால், இந்திய மக்கள் இவரது சித்தாந்தத்தை நிராகரித்துவிட்டனர்" என்றார்.
Speaking on #AbhijitBanerjee, Union Minister #PiyushGoyal congratulated him for his Nobel, but added that India has rejected his left ideas.
மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு இன்று பதில் அளித்துள்ள அபிஜித் பானர்ஜி, "நோபல் பரிசு எங்களுக்கு வழங்கப்பட்டதற்கான காரணம் ஓரளவுக்கு நாங்கள் தொழில் வல்லுநர்கள் என்பதால் தான் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
NYAY திட்டம் குறித்த மத்திய அமைச்சரின் கருத்துக்கு பதில் அளித்த அபிஜித், "நான் தனிப்பட்ட முறையில் பல்வேறு விஷயங்களில் பாகுபாடு கொண்டிருக்கலாம். ஆனால் மக்கள் தீவிரமாக பார்க்க வேண்டும் என்று நான் விரும்பும் பொருளாதாரத்தை பொறுத்தவரையில், நான் பாகுபாடு அற்றவன். யாராவது என்னிடம் ஒரு கேள்வி கேட்டால்… நான் அவரின் நோக்கங்களை கேள்வி கேட்கமாட்டேன்" என்றார்.